உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் புதுமை பெண் திட்டத்தின் பலனாக மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கை கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 27 விழுக்காடு உயர்ந்துள்ளதாக முதல்வர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம், இந்து கல்லூரியில் நடைபெற்ற புதுமைப் பெண் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “புதுமை பெண் திட்டத்தால் பெண்கள் உயர்கல்வி சேர்க்கை கடந்த ஆண்டை விட 27 சதவீதம் அதிகமாகி இருக்கிறது. ஒரு நாடு செழித்து தன்னிறைவுடன் திகழ வேண்டுமென்று சொன்னால், நாட்டில் உள்ள மக்கள் கல்வியறிவு பெற்றவர்களாய் இருப்பது மிகவும் அவசியம். முக்கியமாக, கல்வி என்பது பெண்களுக்கு மிகமிக முக்கியம்!
கல்வி எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்றுதான், நம்முடைய திராவிட இயக்கத்தில் பல்வேறு திட்டங்கள் இதற்காக உருவாக்கப்பட்டது. அதிலும், பெண் சமூகத்தைக் கூடுதலாகக் கவனிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான திட்டங்களை மகளிருக்காக உருவாக்கப்பட்டது.
பல்வேறு சிரமங்களுக்கு இடையில், பள்ளிக்கல்வி பயின்றுள்ள அரசுப்பள்ளி மாணவிகள், College போகாமல் drop-out ஆகக்கூடாது என்பதற்காக இந்தத் திட்டம். இந்த மூவலூர் அம்மையார் பெயரால் உயர்கல்வி உறுதித் திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னால், இந்தத் திட்டத்தின் மூலமாக 6-ஆம் வகுப்பில் படிக்கக் கூடியவர்கள்,
குமரியில் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் அய்யன் திருவள்ளுவர் சிலையின் கழுகு பார்வை காட்சி
அவர்கள் தொடர்ந்து 12-ஆம் வகுப்பு வரை படித்து, முடித்து, மேற்படிப்பிற்கு, கல்லூரிக்கு செல்லுகின்ற நேரத்தில் அவர்களுக்கு வசதி இல்லாத காரணத்தினால், கல்லூரிக்கு செல்லமுடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகதான் மாதா மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்துகிற இந்தத் திட்டத்தை நாம் தொடங்கி வைத்திருக்கிறோம். இந்த மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித் தொகைகளை பெற்று வந்தாலும் இந்தத் திட்டத்தில் கூடுதலாக இந்த உதவியை நீங்கள் பெறுகிறீர்கள்” என்றார்.
ஒரே குடும்பத்தில் 5 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சி; 2 குழந்தைகள் பலி, 3 பேர் கவலைக்கிடம்