திருச்சி கோட்டை ரயில் நிலையம் அருகே மேற்குவங்க இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரு பெண் உள்பட 3 பேரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி கோட்டை ரயில் நிலையம் அருகே வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக திருச்சி கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். கொலை செய்யப்பட்ட வாலிபர் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் என்பதும், திருச்சியில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் தொழிலாளியாக பணியாற்றிய விக்ரம் என்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
undefined
ஈரோடு கிழக்கு தொகுதி; 24, 25ல் பரப்புரை செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்
மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் மூன்று நபர்கள் அவரை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடியது தெரியவந்தது. தொடர்ந்து சிசிடிவி உதவியுடன் தப்பி ஓடிய கொலையாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடினர். இந்நிலையில் இன்று காலை சந்தேகத்து இடமாக ஒரு பெண் உள்பட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஓசூர் அருகே ஏரியில் ஆனந்த குளியல் போடும் காட்டு யானைகள்