காற்று வாங்கிய எடப்பாடியின் அரசு விழா… பணம் கொடுத்தும் சேராத  கூட்டம்…

Asianet News Tamil  
Published : Mar 09, 2017, 08:50 AM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
காற்று வாங்கிய எடப்பாடியின் அரசு விழா… பணம் கொடுத்தும் சேராத  கூட்டம்…

சுருக்கம்

CM function in Madurai

மதுரையில் நடைபெற்ற அரசு விழாவில் பொது மக்கள் கூட்டமே இல்லாததால் அப்செட்டான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக பேச்சை முடித்துக் கொண்டு வெளியேறினர்.

மதுரை, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் ஆயிரத்து நான்கு கோடி ரூபாயில் திட்டப் பணிகள் தொடக்க விழா,  மதுரை உலக தமிழ்சங்க அரங்கில் நடைபெற்றது.

ஏற்கனவே நேற்று ஓபிஎஸ் அணி சார்பில் ஜெயலலிதா மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகங்களை தீர்க்கும் வகையில் நீதி விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. மதுரையில் உள்ள பெரும்பாலான தொண்டர்கள் அங்கு சென்று விட்டனர்.

அதே நேரத்தில்  பணம் கொடுத்து  அரசுப் பேருந்துகள் மூலம் ஆட்களை அழைத்து வர அமைச்சர்கள் செல்லுார் ராஜு, உதயகுமார் ஆகியயோர் ஏற்பாடு செய்திருந்தனர். ஆனாலும் எடப்பாடி பங்கேற்ற விழாவுக்கு பொது மக்கள் வரவில்லை.

இதனால் அப்செட்டான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சில நிமிடங்கள் மட்டுமே பேசி விட்டு உடனடியாக அங்கிருந்து கிளம்பினார்.

முதலமைச்சர் பங்கேற்ற கூட்டத்தில் கலந்த கொள்ள கூட்டம் சேராத நிலையில், ஓபிஎஸ் அணியினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.

 

 

PREV
click me!

Recommended Stories

அதிமுக.. திமுக புரிஞ்சுக்கோங்க மரியாதை மற்றும் சீட்டுகளை யார் தருகிறார்களோ அவர்களோடு தான் கூட்டணி
3வது வரிசையில் தள்ளப்பட்ட ராகுல் காந்தி... கொதித்தெழுந்த காங்கிரஸ்.. இதுதான் ஜனநாயகமா?