
முதல்வரின் முதன்மை செயலாளரை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக முதலமைச்சரின் முதன்மை செயலாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையொட்டி வெவ்வேறு பிரிவுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக முதலமைச்சரின் 2து தனி செயலாளராக இருந்த ஷிவ்தாஸ் மீனா மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால், 3வது இடத்தில் இருந்த விஜயகுமார் 2வது செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் வகித்து வந்த 3வது இடத்துக்கு செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், நிதித்துறை செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி சித்திக், பொதுத்துறை செயலாளராக மைதிலி ராஜேந்திரன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய அரசு பணிக்கு செல்வதால், நாளையுடன் ஷிவ்தாஸ் மீனா, பணி விடுவிப்பு ஆகிறார். இதனால், தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.