திட்டமிட்டப்படி நாளை மறுநாள் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரிசல்ட்.. தேர்வுத்துறை அறிவிப்பு..

By Thanalakshmi VFirst Published Jun 15, 2022, 3:51 PM IST
Highlights

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி நாளை மறுநாள் வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. 
 

விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்த நிலையில் திட்டமிட்டபடி நாளை மறுநாள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு 2021- 22 ஆம் கல்வியாண்டிற்கான 10,11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடந்து முடிந்தது. அதன் படி தமிழகத்தில் 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மாதம் 6-ம் தேதி தொடங்கி மே 30 ஆம் தேதி முடிவடைகிறது. இந்த தேர்வை மொத்தம் பள்ளிகள் மூலம் 9 லட்சத்து 55 ஆயிரத்து 139 மாணவ-மாணவியர் எழுதினர்.

மேலும் படிக்க: மாணவர்கள் கவனத்திற்கு!! பள்ளிகளில் முழு பாடத் திட்டம் அமல்.. பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு..

இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமாக 9.55 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஆனது ஜூன் 17-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்த நிலையில் திட்டமிட்டபடி நாளை மறுநாள் 17-ஆம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மேலும்  மாணவர்கள் தங்கள் முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க:TN TET Exam 2022 : விரைவில் வரும் ஆசிரியர் தகுதி தேர்வு - தேதி எப்போது தெரியுமா ?

click me!