122 ஆண்டுகளுக்கு பிறகு பெய்த மிக கனமழை..! ஒரே நாளில் கொட்டி தீர்த்த மழையால் தவிக்கும் சீர்காழி மக்கள்

By Ajmal KhanFirst Published Nov 14, 2022, 10:31 AM IST
Highlights

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு  24 மணி நேரத்தில் 44 செ.மீ., மழை பெய்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் மிகுந்த பாதிப்பை அடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கொட்டித்தீர்த்த மழை

வட கிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மழையானது தீவிரம் அடைந்துள்ளது. அந்தவகையில் இலங்கையில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், என பல்வேறு பகுதிகளில் பெய்த மழை சீர்காழி பகுதியில் முழுவதுமாக கொட்டி தீர்த்துள்ளது.  கடந்த 1900ஆம் ஆண்டுக்கு பிறகு சீழ்காழியில் கடந்த சனிக்கிழமை மிக, மிக கன மழையானது பெய்துள்ளது. சீர்காழியில்  24 மணி நேரத்தில் 44 செ.மீ., பெரும்பகுதி -34.8 செ.மீ மழையும் பெய்துள்ளது.

122 ஆண்டுகளில் இல்லாத மழை.. சீர்காழியை சீரழித்த பேய் மழை.. களத்தில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின்.. நேரலை..!

தீவாக காட்சி அளிக்கும் சீர்காழி

இந்த கன மழையால் மயிலாடுதுறையில் மாவட்டத்தில் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திரும்பிய திசையெல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கும் சீர்காழி பகுதி குட்டி தீவு போல உருவாகியுள்ளது. குறிப்பாக சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், திருமுல்லைவாசல், சூரைக்காடு, கொள்ளிடம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் மிக அதிக கனமழை பெய்துள்ளது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தும், விவசாய நிலங்கள் முற்றிலும் மூழ்கியும் உள்ளது. இந்த மழையால் சுமார் 40,000 ஹெக்டேர் நெல் (சம்பா மற்றும் தாளடி) பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் என்ன செய்வது என்பது கூட தெரியாத நிலையில் உள்ளனர்.

மீண்டும் மிரட்டப்போகிறதா கனமழை? எந்த பகுதி தெரியுமா? தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன முக்கிய தகவல்..!

122 ஆண்டுகளுக்கு பிறகு கன மழை

சீர்காழி அருகேயுள்ள உப்பனாற்றின் கரையில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு, சூரக்காடு, தென்பாதி, சட்டநாதபுரம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகள் மழைநீரால் சூழப்பட்டன.  சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது.  1000-க்கும் மேற்பட்ட கிராமங்களை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். கன மழை தொடர்பாக தகவல் தெரிவித்த வானிலை ஆய்வு மைய தென் மண்டல் தலைவர் பாலசந்திரன் கூறுகையில், 1900 ஆண்டுக்கு பிறகு சீர்காழியில் மிகப்பெரிய அளவிலான மழையாக 44 செ.மீ மழை 24 மணி நேரத்தில் பெய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனிடையே மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார்.  

இதையும் படியுங்கள்

சீர்காழியில் வரலாறு காணாத மழையால் விவசாயிகள் பாதிப்பு..! ஹெக்டேருக்கு 75ஆயிரம் வழங்கிடுக..! ஓபிஎஸ்

click me!