சிஐடியு மாநில பொதுச்செயலர் அனிதா வீட்டுக்குச் சென்று மலரஞ்சலி; ரூ.1.50 இலட்சம் நிதியுதவியும் வழங்கினார்…

First Published Oct 13, 2017, 7:54 AM IST
Highlights
CITU state general secretary Anita went to the house and asked her to get married. Rs.1.50 lakh was financed by the ...


அரியலூர்

சிஐடியு மாநில பொதுச்செயலர் அனிதாவின் வீட்டுக்குச் சென்று மலரஞ்சலி செலுத்தி, அனிதாவின் தந்தையிடம் சிஐடியு சார்பில் ரூ.1.50 இலட்சம் நிதி உதவியையும் அளித்தார்.

நீட் தேர்வால் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காத மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாவட்டம், குழுமூர் கிராமத்தை சேர்ந்த மாணவி அனிதா வீட்டுக்கு நேற்று மாலை சிஐடியு மாநில பொதுச் செயலர் சுகுமாறன் சென்றார்.

அங்கு, அனிதாவின் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி, அவரின் தந்தை சண்முகம், சகோதர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும், சிஐடியு சார்பில் ரூ.1.50 இலட்சம் நிதி உதவியையும் அளித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

“நீட் தேர்வை ஜெயலலிதா தொடர்ந்து எதிர்த்து வந்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமி அந்தத் தேர்வை ஆதரிக்கும் நிலையை கண்டிக்கிறோம். தமிழக அரசு நீட் தேர்வுக்கு எதிராகத் தொடர்ந்து போராட வேண்டும்.

சாதாரணமானவர்கள் மருத்துவராக வேண்டும் என நினைப்பதை இத்தேர்வு தடுத்து நிறுத்தியுள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக என்றும் சிஐடியு போராடும்.

அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஏமாற்று வேலை. கடந்த 2016 ஜனவரியில் வழங்க வேண்டிய ஊதியத்தை தற்போது வழங்கியுள்ளது. மேலும், அன்றிலிருந்து வழங்க வேண்டிய முன்பணத்தையும் கொடுக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார். 

click me!