
அரியலூர்
மத்திய அரசைக் கண்டித்து மருத்துவ ஆய்வகர்கள் அரியலூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டம், செயங்கொண்டத்தில் மத்திய அரசைக் கண்டித்து மருத்துவ ஆய்வகர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இரத்தப் பரிசோதனை முடிவுகளில் மருத்துவ ஆய்வகர்கள் கையெழுத்திடக் கூடாது, மருத்துவர்கள்தான் கையெழுத்திட வேண்டும் என்ற இந்திய மருத்துவ குழுவின் பரிந்துரையை நடைமுறைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்துவரும் மத்திய அரசைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மருத்துவ ஆய்வகர்கள் நலச் சங்க மாவட்டத் தலைவர் த.முத்துக்குமரன் தலைமைத் தாங்கினார். மாவட்டச் செயலர் அருள் வரவேற்றார். அகில இந்தியத் தலைவர் காளிதாசன், மாநிலத் தலைவர் துரைசாமி ஆகியோர் பேசினர்.
மாவட்டப் பொருளாளர் செல்வராஜ், துணைத் தலைவர்கள் செல்வி, மாரியப்பன், துணைச் செயலர்கள் சுந்தரி, மணிகண்டன் ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தி இறுதியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மனோகரன் நன்றித் தெரிவித்தார்.