தமிழ்நாட்டில் அமெரிக்க போதை மாத்திரைகள் புழக்கம்: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

By SG BalanFirst Published Apr 15, 2024, 10:44 PM IST
Highlights

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளாக அபின், கஞ்சா மட்டுமின்றி அமெரிக்க போதை மாத்திரைகளும் புழங்கத் தொடங்கி வருகின்றன என்று அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக கஞ்சா அபின் மட்டுமின்றி அமெரிக்காவில் கிடைக்கும் போதை மாத்திரைகள் கூட புழங்குகின்றது என்றும் அதனால் பள்ளி மாணவர்கள் போதைக்கு அடிமையாகின்றனர் எனவும் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிகள் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் மா கா ஸ்டாலினை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஸ்டேட் பேங்க் சாலையில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பாரதிய ஜனதா கட்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பிரச்சார கூட்டத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கூட்டத்தில் பேசிய டாக்டர் அன்புமணி ராமதாஸ் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெரும் என்றும் இந்த வெற்றி வரும் சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும் என்றும் தெரிவித்தார்.

திராவிட கட்சிகள் நான்கு தலைமுறைகளாக தமிழ்நாட்டை போதைக்கு அடிமையாக்கி வைத்திருந்ததாகவும் சாராயம் தாண்டி தற்பொழுது பள்ளிக்கூடம் மாணவர்கள் மத்தியில் கஞ்சா அபின் ஊசி உள்ளிட்ட போதை மருந்துகள் புழக்கத்தில் உள்ளதாகவும் அமெரிக்காவில் கிடைக்கும் போதை வஸ்துகள் தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக சர்வ சாதாரணமாக புழங்குவதாக அப்போது அவர் தெரிவித்தார் தாய்மார்கள் சிந்தித்துப் பார்த்து தங்கள் வாக்கை செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்

click me!