சுப்ரமணியபுரம் பட தயாரிப்பாளர் திடீர் தற்கொலை!! கந்து வட்டியால் நேர்ந்த கொடுமை...

 
Published : Nov 21, 2017, 08:15 PM ISTUpdated : Sep 19, 2018, 01:28 AM IST
சுப்ரமணியபுரம் பட தயாரிப்பாளர் திடீர் தற்கொலை!! கந்து வட்டியால் நேர்ந்த கொடுமை...

சுருக்கம்

cinema producer ashok kumar suicide for hanging himself

தயாரிப்பாளர் ஜி.வி. முன்னர் கந்து வட்டி காரணத்தால் தற்கொலை செய்து கொண்டார். இப்போது,  இணை தயாரிப்பாளராக இருந்த அசோக் என்பவரும் கடன் தொல்லை கழுத்தை நெரிக்க, தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் சசிகுமார். இவருடைய தயாரிப்பு நிறுவனத்தில் நிர்வாகியாகவும், சசிகுமாரின் படங்களின் இணை தயாரிப்பாளராகவும் இருந்தவர் அசோக்குமார். பசங்க, சுப்ரமணியபுரம் உள்ளிட்ட சில படங்களில் சில காட்சியில் நடிக்கவு செய்திருக்கிறார். இவர் சசிகுமாரின்  அத்தை மகன் உறவும் கூட. 

அசோக், சென்னையில் வளசரவாக்கம் பகுதியில் உள்ள ஆற்காடு சாலை தனியார் அபார்ட்மெண்ட் ஒன்றில் தங்கியிருந்தார். இவர் திடீரென செவ்வாய்க்கிழமை இன்று(நவ.21) வீட்டில்  தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. ஆனால், அவர் கழுத்தை நெரிக்கும் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

அசோக் குமாருக்கு கடன் கொடுத்த நபர் மிரட்டி தொல்லை கொடுத்ததால் அவர் கடன் பிரச்சனையால் ஏற்பட்ட மன உளைச்சலுடன் இருந்ததாக உடன் இருந்தவர்கள் கூறியிருந்தனர். இறந்த அசோக்குமார் இணை தயாரிப்பாளர் மற்றும் கம்பனி புரொடக்‌ஷன் அலுவலக நிர்வாகியும் கூட!

PREV
click me!

Recommended Stories

அந்த முட்டாளுக்கு தான் சொல்லுறேன் திமுக ஆட்சிக்கு வந்து செஞ்ச முதல் ஊழல் இதுதான் - ஹெச்.ராஜா பேட்டி
அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழு! பழனிசாமியின் பக்கா பிளான்!