
ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் நடைபெற்று வரும் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்குழு தற்போது விசாரணையை சூடுபிடிக்க செய்துள்ளது.
"யாரை வேண்டுமானாலும் விசாரணை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மனுவை விசாரணை கமிஷன் தமிழக அரசிடம் வழங்கியது.
ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள்,லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே மற்றும் சிங்கப்பூர் மருத்துவர்கள் என அனைவரும் பிசியா வந்து வந்து சென்றனர்.அப்போது மருத்துவமனையில் ஜெயலலிதாவுடன் இருந்த சசிகலா தற்போது பெங்களூரு அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்
இந்நிலையில் நாளை சசிகலாவிடம் விசாரணை நடத்த கமிஷன் முடிவு செய்து உள்ளது.அதற்கான அனுமதியும் பெங்களூரு சிறைதுறை வழங்கியது.இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தான்
"யாரை வேண்டுமானாலும் விசாரிப்பதற்கு சிறப்பு அதிகாரம் வழங்கக்கோரி பொதுத்துறை செயலருக்கு ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்குழு கடிதம் அனுப்பியுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட உள்ள நிலையில் இவ்வாறு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த கடிதத்திற்கு அரசு தரப்பிலிருந்து, " சட்டத்துறையிடம் ஆலோசனை செய்துவிட்டு,விரைவில் பதில் கொடுக்கப்படும் என தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
அரசிடமிருந்து அனுமதி கிடைக்கும் தருவாயில், தற்போதைய முதல்வர் துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் என யாரை வேண்டுமானாலும் விசாரணை குழு விசாரித்து உண்மைத்தன்மையை அறிக்கையாக தாக்கல் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது