ஆன்மிக அரசியல் தமிழகத்தில் எடுபடுமா? ரஜினியின் மந்திராலய விசிட்டும் மக்களின் எஃபக்டும்! 

First Published Nov 21, 2017, 3:37 PM IST
Highlights
Ardent Raghavendra Devotee Rajinikanth Visits Mantralayam


ஆந்திரப் பிரதேசம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள மந்திராலயத்துக்கு செவ்வாய்க்கிழமை இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் திடீரென தரிசனத்துக்கு வந்திருந்தார். அவருக்கு மடாலயத்தில் இருந்து மரியாதைகள் செய்யப்பட்டன.

கி.பி., ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மகான் ஸ்ரீ ராகவேந்திரர். மாத்வ வழிபாட்டு முறையின் ஆசார்யராக அறியப் பட்டவர். அவருடைய ஜீவ சமாதி மந்திராலயத்தில் அமையப் பெற்றுள்ளது. தமிழகத்தில் உள்ள புவனகிரியில் பிறந்து மந்திராலயத்தில் சமாதியான ஸ்ரீராகவேந்திரருக்கு தமிழகத்திலும் ஏராளமான பக்தர்கள் உள்ளனர். அவருடைய மிருத்திகா பிருந்தாவனம் எனப்படும் கோயில்கள் தமிழகத்தில் பல இடங்களில் உள்ளன. 

கர்நாடக எல்லையை ஒட்டி, துங்கபத்திரா நதிக்கரையில் உள்ள இந்த பிருந்தாவனத்துக்கு அடிக்கடி விஜயம் செய்வார் ரஜினிகாந்த். அவருக்கு ராகவேந்திரர் மீது பக்தி அதிகம். அந்த பக்தியின் காரணத்தாலேயே ரஜினி காந்த் தனது நூறாவது படத்தை ராகவேந்திரர் நினைவாக, ஸ்ரீராகவேந்திரா எனும் திரைப்படமாக நடித்து, ராகவேந்திரரின் புகழ் பரப்பினார். கடைக்கோடி ரசிகனும் ராகவேந்திரர் குறித்து அறியச் செய்ய முயற்சி எடுத்தார் ரஜினி காந்த். 

இந்நிலையில் இன்று காலை மந்திராலயத்துக்குச் சென்ற அவருக்கு மடத்தின் சார்பில் சால்வை அணிவித்து, ஸ்ரீராகவேந்திரரின் பிரசாதங்களும் வழங்கப்பட்டன. 

இப்போது தமிழக அரசியல் களம் பரபரப்பாக உள்ளது. அதற்குக் காரணம் ரஜினி, கமல் என்ற ரசிகர்கள் பட்டாளத்தை அதிகம் கொண்டிருக்கும் இரு பெரும் நடிகர்களின் அரசியல் பிரவேசம் குறித்த செய்திகள்தான். அந்த எதிர்பார்ப்புகளை இருவரும் எப்படி நிறைவேற்றுவார்கள் என்று பலரும் பேசி வருகின்றனர். 

கமல்ஹாசன், தன்னை ஒரு பகுத்தறிவுவாதி என்று கூறிக் கொண்டு, இந்து மத விரோதக் கருத்துகளை  மட்டுமே விதைத்துக் கொண்டிருக்கிறார்.  ரஜினியோ அப்பட்டமாக தான் ஒரு ஆன்மிக வாதி என்று சொல்லி, இமயமலைக்கும் மந்திராலயத்துக்கும் சென்று வருகிறார். அரசியலில் ஆன்மிகம் எப்படி உதவுப் போகிறது என்பதை ரஜினியின் மூலம் தமிழகம் காணப் போகிறது. 
 

click me!