சூடு பிடிக்கும் விசாரணை...! ஜெ மரணம் - ரிச்சர்ட் பீலேவுக்கு பாய்கிறது சம்மன்...! விசாரணை கமிஷன் அதிரடி..!

First Published Nov 21, 2017, 1:15 PM IST
Highlights
jjayalalitha death investigation team planned to send the samman to richard peele


ஜெ மரணம்  குறித்து விசாரணை நடத்த  ஓய்வுபெற்ற  நீதிபதி  ஆறுமுகசாமி   தலைமையில் விசாரணை  கமிஷன்  அமைக்கப்பட்டு  உள்ளது .

தற்போது  இது  குறித்து  தீவிர  விசாரணை  நடத்தி வரும்  கமிஷன், இதற்கு முன்னதாக அப்போலோ மருத்துவமனையிலும்  விசாரணை  மேற்கொண்டார்.

இதனை  தொடர்ந்து  தற்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே, அப்பல்லோ மருத்துவர்கள் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களுக்கு, விசாரணை  கமிஷன் சம்மன்  அனுப்ப  உள்ளதாக   தற்போது  தகவல்  வெளியாகி உள்ளது

புகார்  அளிக்கலாம்

நவம்வர் 22 வரை, அதாவது ஜெ மரணம்  குறித்து புகார்  அளிக்க   நாளை கடைசி  தினம்  என்பதால் சில  புகார்கள்  வந்துகொண்டே இருக்கிறது.

 நாளை  வரை பெறப்படும் புகார்களின் அடிப்படையில் விசாரணை துவங்கும் என்றும், மேலும் முக்கிய புள்ளிகளையும் ஜெ மரணம்  தொடர்பாக  விசாரணை  செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில் ஜெயலலிதா மரணம் குறித்து லண்டனிலிருந்து வந்த டாக்டர் பீலே, சிங்கப்பூர் பிசியோதெரபிஸ்ட் மருத்துவர்கள், அப்பல்லோ டாக்டர்கள் மற்றும் எய்ம்ஸ் டாக்டர்களுக்கு சம்மன் அனுப்ப விசாரணை கமிஷன் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெளி நாட்டிலிருந்து  வந்து  சிகிச்சை அளித்த  மருத்துவருக்கு சம்மன்  அனுப்பும் தருவாயில், இது தொடர்பாக  தமிழக  முதல்வர் , துணை முதல்வர்  மற்றும் சில அமைச்சர்கள் என பலர்  மீதும்  விசாரணை  பாயும்  என  எதிர்பார்க்கப் படுகிறது  

 

click me!