
பரபரப்புக்கு பெயர் போன தமிழக அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக நாஞ்சில் சம்பத் பேச்சு அமைந்துள்ளது.
அதாவது ஒபி எஸ் - இபிஎஸ் இரு அணிகளும் மன ரீதியாக இன்னும் இணையவில்லை என்று அம்பலப்படுத்தும் விதமாக ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு எல்லாமாக இருந்து இயக்கிக் கொண்டிருந்த அதிமுக., எம்.பி., வா.மைத்ரேயன் இன்று தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வைத்துள்ளார்
"ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணி இணைந்து இன்றோடு மூன்று மாதங்கள் நிறைவுற்று நான்காவது மாதம் தொடங்குகிறது. மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?"
- என்று பதிவிட்டிருக்கிறார் மைத்ரேயன். இதன் மூலம், சந்தர்ப்ப வசத்தால், இரு அணிகளும் சேர நேரிட்டது என்றும், சேர்ந்து நூறாவது நாளை எட்டும் நிலையில் மன ரீதியாக இரு அணிகளும் சேரவில்லை என்றும் கூறியிருக்கிறார்.
மன ரீதியாக இரு அணிகளும் இணைய வேண்டும் என்று தனது ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார் என்றே வைத்துக் கொண்டாலும், இன்னும் அப்படி இணையவில்லை என்றேதான் பொருளாகிறது.
நாஞ்சில் சம்பத் சொன்னது என்ன ?
இதற்கு பதில் அளிக்கும் விதமாக நாஞ்சில் சம்பத், தற்போது "மைத்ரேயன் மனதில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.5 ரிக்டரில் பதிவாகியுள்ள அது தொடரும்.அனைவர் மனதிலும் வரும்" என குறிப்பிட்டு உள்ளார்.
அதாவது தினகரன் தரப்பு தொடர்ந்து OPS- EPS அணிகள் நிலைக்காது என தெரிவித்து வந்தனர். அதற்கேற்றார் போல் தற்போது இந்த அணிகள் நிலைக்குமா என்ற கேள்வி குறையை முன்வைப்பது போலவே மைத்ரேயன் அவர்களே தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்து இருப்பதால், விரைவில் தேர்தல் வந்துவிடுமோ என்றே நினைக்க வைக்கிறது.இதனால் அரசியல் வட்டாரத்தில் ஒரு சஞ்சலப்பு ஏற்பட்டு உள்ளது