​தமிழகத்தில் தலைதூக்கும் சீன போலி முட்டைகள் : ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்..!!!

 
Published : Nov 14, 2016, 06:41 AM ISTUpdated : Sep 19, 2018, 01:32 AM IST
​தமிழகத்தில் தலைதூக்கும் சீன போலி முட்டைகள்  : ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்..!!!

சுருக்கம்

சீனப் பட்டாசுகளைத் தொடர்ந்து, சீனாவிலிருந்து போலி முட்டைகள் தமிழகத்தில் விற்பனை செய்யப்படுவதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது.  மத்திய, மாநில அரசுகள் இதனை சிறப்பு குழுக்கள் அமைத்து  கண்காணிக்க கோழிப்பண்ணை உரிமையாளர்களும்,  உணவு பாதுகாப்பு நிபுணர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

சீனப்பட்டாசுகள் இந்திய வியாபாரிகளின் பொருளாதாரத்தை நசுக்கி வரும் நிலையில் அந்நாட்டிலிருந்து களமிறக்கப்படும் போலி முட்டைகள் புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதாக பரபரப்பு எழுந்துள்ளது.  

சமீபத்தில் கேரளாவிலும், மகாராஷ்டிராவிலும் கடைகளில் போலி முட்டைகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டுவதை கண்டித்து போலி முட்டைகளை விற்பனை செய்த கடைகள் முன்பு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடும் காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவியது.

இந்த போலி முட்டைகள் கோழி முட்டைகளுடன் கலந்து விற்பனை செய்யப்படுவதால் முட்டை உற்பத்தியாளர்களும், பொதுமக்களும் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

இதுகுறித்து நாமக்கல்லில் உள்ள முட்டை உற்பத்தியாளர் ஒருவா்  கூறும் போது, மத்திய  அரசு போலி முட்டைகளை ஒழிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

சீனாவில் பல்வேறு விதமான ரசாயனங்களைக்  கொண்டு போலி முட்டைகள் தயாரித்து இந்தியாவில் இறக்குமதி  செய்யப்படுவதாகவும் இந்த முட்டைகளை உட்கொள்ளும்போது உடல் நிலை பாதிக்கப்படுவதோடு புற்றுநோயை போன்ற கொடிய நோய்கள் ஏற்படும் என்றும் கூறுகிறார்.

உணவு பாதுகாப்பு ஆலோசகர்கள் தொிவிக்கின்றனர். உணவு பாதுகாப்பு துறையும், மத்திய அரசும் கண்காணித்து இந்தியாவில் போலி முட்டைகளின் விற்பனையை தடுக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காோிக்கை எழுந்துள்ளது. 

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் முட்டைகளில் போலிகளை கண்டறிவது எப்படி என்பது குறித்து மக்களிடையே அரசு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசிடம் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அதே நேரம் போலி முட்டைகள் நடமாடுவதாக வலைதளங்களில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் வெறும் வதந்தி என்றும் அவ்வாறு போலி முட்டைகள் தயாரிப்பது எளிதில் சாத்தியமில்லாத ஒன்று என்றும் கூறப்படுகிறது.

முட்டை விற்பனையை சரிவடையச் செய்யும் நோக்கத்துடன் இதுபோன்ற வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காோிக்கைகள் எழுந்துள்ளன. 

போலி முட்டைகள் நடமாடுவது உண்மையோ, பொய்யோ ஆனால் இது குறித்து ஆராய்ந்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது மத்திய மாநில அரசுகளின்  கடமை என்று முட்டை நுகர்வோர்கள் வலியுறுத்துகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

நம்பிக்கை வாக்கெடுப்பில் முதுகில் குத்திய திமுகவினர்..! முக்கிய விக்கட்டை தூக்கிய எடப்பாடி..! ஸ்டாலின் அதிர்ச்சி
புதிய பொறுப்பாளர்கள் நியமித்து அதிரடி.. தமிழ்நாடு அரசியலில் பாஜக அதிரடி மூவ்!