
தென்கிழக்கு வங்கக் கடலில் அந்தமான் அருகே மேலடுக்கு காற்று சுழற்சி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் கிழக்கு திசையில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.
இதனால் அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை பெய்யும். உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னையில் இன்று அதிகாலை 6 மணியளவில் லேசாக மழை பெய்தது.
புதுவை மற்றும் கடலூர், தஞ்சை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும் லேசாக மழை தூறியது என்றும் காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரம் அடைந்து தமிழக நிலப்பரப்பை நோக்கி நகர்ந்ததால் மழை அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.