
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்ததையடுத்து பொதுமக்கள் தாங்கள் வைத்திருக்கும் பணத்தை மாற்றவும், வங்கிகளில் பணம் எடுக்கவும் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக புரளி பரவியது. உடனடியாக உப்பு பாக்கெட்டுகளை வாங்க பொதுமக்கள் திரண்டதால் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த உப்பு பாக்கெட்டுகள் அதிகமான விலைக்கு விற்கப்பட்டது.
இந்த புரளியால் டெல்லி, உத்திரபிரதேசம், மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் 1கிலோ உப்பு 500– ரூபாய்க்கும் மேல்விற்கப்பட்டது.
இதேபோல், தமிழகத்திலும் புரளி பரவியதால் உப்பு பாக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் ஒரு கிலோ உப்பு 700 ரூபாய்க்கு விற்க்கப்பட்டது.
இதனிடையே, உப்பு தட்டுப்பாடு புரளியை மத்திய அரசும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் மறுத்துள்ளது. மக்களுக்கு தேவையான அளவு உப்பு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கையிருப்பு உள்ளதாகவும், மக்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம் எனவும்தெரிவித்துள்ளனர்.