மூடு விழா கண்ட ATM மையங்கள் – தெரு தெருவாக அலைந்து திரியும் மக்கள்

First Published Nov 13, 2016, 5:55 AM IST
Highlights


நாள் ஒன்றுக்கு ரூ.4000 வரை மட்டுமே பணமாற்றம் செய்ய முடியும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால், 3வது நாளான இன்றும், வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் மக்கள் கூட்டம் காணப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். இந்த நோட்டுகளை அடுத்த மாதம் 30ம் தேதி வரை வங்கிகளில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற்று கொள்ளலாம் என மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நாடெங்கும் நேற்று முன்தினம் அமலுக்கு வந்தது.

3வது நாளான இன்று, பல்வேறு வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களுக்கு மக்கள் படையெடுத்தனர். பொதுமக்கள் அதிகாலை முதல் வங்கி வாசலில் கால் கடுக்க காத்திருந்து பணத்தை பெற்று செல்கின்றனர். இதேபோல், ஏடிஎம் மையங்களில், பணம் எடுத்து விடலாம் என்ற நம்பிக்கையில், சென்றனர்.

அனால், அவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைந்தது. பெரும்பாலான ஏடிஎம்களில் பணத்தை இதுவரை நிரப்பவில்லை. இதனால், அவசர தேவைக்கு பணம் எடுக்க முடியாமல் நள்ளிரவு முதல் பொதுமக்கள் அலையாய் அலைகின்றனர் பல ஏடிஎம் மையங்கள் மூடப்பட்டு கிடந்தன.

மாத சம்பளம் வாங்குபவர்களில் பெரும்பாலானவர்கள் ஏடிஎம் மெஷினில், தங்களது தேவைக்கு ஏற்றபடி அடிக்கடி பணத்தை எடுத்து செலவு செய்யும் பழக்கத்தில் உள்ளனர். அவர்களில் பலர் கடந்த 2 நாட்களை எப்படியோ சமாளித்தனர். தற்போது, பணம் இல்லாத காரணத்தால் ஏடிஎம் மையத்தை தேடி இன்று அதிகாலையில் பால் வாங்க செல்லும்போதே, தேடி செல்ல தொடங்கிவிட்டன.

பல இடங்களில் ஏடிஎம் மெஷின்களில் அதிகபட்சமாக ரூ.2000 மட்டுமே எடுக்க முடியும் என்ற முக்கிய மாற்றம் இன்னும் செய்யவில்லை என தெரிகிறது. இதனால், மக்களிடையே ஏற்பட்டுள்ள பாதிப்புகள் விலகி பணத்தை கையாள்வதில் இயல்பு நிலை திரும்ப இன்னும் 3 வாரங்கள் ஆகும் என்று தெரிகிறது. அதற்குள், டிசம்பர் மாதமும் வந்துவிடும். அடுத்த மாத சம்பளத்தை சேர்த்து எடுத்து கொள்ளலாம் என பொதுமக்கள் சிலர் ஆதங்கத்துடன் கூறுகின்றனர்.

click me!