தொடர்ந்து பெய்து வரும் மழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களை காக்க அரசு இயந்திரம் முழுமையாக குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், தென் மாவட்ட மக்களை காப்போம் என உறுதி அளித்தார்.
மழை பாதிப்பில் இருந்து சென்னை மீட்பு
கோவை சிறைச்சாலை மைதானத்தில் 133.21 கோடி ரூபாய் மதிப்பீட்ட செம்மொழி பூங்கா அமைக்கும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்து சுமார் 7945 பேருக்கு 110 கோடியே 51 லட்சத்து 34 ஆயிரத்து 608 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் முத்துசாமி, பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
undefined
இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், சென்னை, காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த 4ஆம் தேதி பெரிய அளவில் மழை பெய்தது. 47 ஆண்டு காலமாக இல்லாத மழை பெய்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாகவும், மழைக்கு பிறகு மேற்கொண்ட நடவடிக்கையையும் அரசு தீவிரமாக மேற்கொண்டது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடுமையாக மழை ஒரு நாள் முழுவதும் பெய்தது. மழை நின்ற பின்பு நிவாரண பணிகளை தொடங்கினோம். 3 நாட்களில் மின் இணைப்பு முழுமையாக கிடைத்தது.
தென் மாவட்டங்களை மீட்போம்
நான்கைந்து நாட்களில் இயல்பு வாழ்க்கை திரும்பியது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6000 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த இரண்டு தினங்களாக தென் மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்களில் அரசு இயந்திரம் முழுமையாக குவிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் அரசு அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசி வருகிறேன். சென்னையை ஏற்பட்ட நிகழ்வுகளை முன்னெடுத்து போல் செயல்பட்டு தென் மாவட்ட மக்களை காப்போம் என உறுதி அளிக்கிறேன். பல்வேறு மக்கள் நல திட்டங்கள் மூலம் சமுதாயத்தில் ஏழை எளிய விளிம்பு நிலை மக்கள் உட்பட எல்லா தரப்பு மக்களுக்காக திரவிட மாடலரசு செயல்பட்டு வருகிறது.
கோவையில் செம்மொழி பூங்கா
கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தை துவங்கி சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு நேரில் சென்று கள நிலவரங்களை பார்த்து மண்டல கூட்டங்களை நடத்தி அறிவுறுத்தி வருகிறேன். பொதுமக்கள் அதிகம் நாடி செல்லும் 13 அரசு துறைகளின் மூலம் மக்களுக்கு சேவைகள் செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் பல்நோக்கு மருத்துவமனை,மதுரையில் நூற்றாண்டு நூலகம் கலைஞர் ஜல்லிக்கட்டு அரங்கம் போன்றவை வரிசையில் கோவைக்கு செம்மொழி பூங்கா அமைக்கப்பட உள்ளது. செம்மொழி பூங்காவின் முதற்கட்டமாக 45 ஏக்கர் நிலப்பரப்பிலும் இரண்டாம் கட்டமாக 120 ஏக்கரிலும் அமைய இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
மிதக்கும் தென் மாவட்டங்கள்: திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்!