தென் மாவட்டங்களில் ஒரு வருடம் முழுவதும் பெய்யவேண்டிய மழையானது ஒரே நாளில் கொட்டி தீர்த்துள்ளதாக தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த சனிக்கிழமை இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. மழையின் ஆதிக்கம் ஞாயிற்றுக் கிழமை மிகவும் கொடூரமாக இருந்தது. இதனால் பெரும்பாலான சாலைகள் ஆறுகளாகவும், சிற்றோரைகளில் காட்டாற்று வெள்ளமும் ஏற்பட்டது. சாலைகளும், சிற்றோடைகளுமே ஆறாக மாறியதால் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணியும் இரு கரைகளையும் தாண்டி வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது.
இதனிடையே வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணத்தில் 93.2 செ.மீ மழை பதிவாகி உள்ளது. திருச்செந்தூர் 67 செ.மீ., ஸ்ரீவைகுண்டம் 62 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை காப்பதற்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பேரிடர் மீட்புப் படையினர் தென்மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர்.
இளைஞரை கட்டாயப்படுத்தி ஓரினச்சேர்க்கையில் ஈடுபடக்கோரி கொலைவெறி தாக்குதல்; திருச்சியில் 5 பேர் கைது
இதனிடையே இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, “தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மீட்பு பணிகளுக்காக ராணுவம் அழைக்கப்பட்டுள்ளது. இரு மாவட்டங்களிலும் வரலாற்றில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது. மழை, வெள்ளம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளது. மழை, வெள்ள மீட்புப் பணிகளை சிறப்பு அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். சூலூர் விமான தளத்தில் இருந்து விமானம் மூலம் நிவாரண உதவிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மீட்பு பணிகளுக்காக ராணுவம், கடற்படை, விமானப்படை என முப்படைகளின் உதவி கோரப்பட்டுள்ளது தூத்துக்குடியில் மழைநீர் வடிய சற்று தாமதம் ஏற்படலாம்" என்று தெரிவித்துள்ளார்.