தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனையடுத்து திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில், “தென் தமிழக பகுதிகளான கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி பகுதியில் மழை தொடங்கியது. இந்தப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு இடைவிடாது மழை பெய்யும். மாஞ்சோலை மலை மற்றும் கோதையாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளை கண்காணிக்க வேண்டும்.
தொடர் கனமழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இது பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. pic.twitter.com/WkhjacYT8x
— Asianetnews Tamil (@AsianetNewsTM)undefined
மணிமுத்தாறு மற்றும் பாபநாசம் அணை இரண்டில் இருந்து உபரி நீர் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மாஞ்சோலை மலைப்பகுதியில் 30-50 செ.மீ மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மாஞ்சோலை மலைப்பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். கேரளாவின் திருவனந்தபுரம் மற்றும் கொல்லத்தின் மறுபகுதியிலும் கனமழை பெய்யும்" என்று தெரிவித்துள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி பகுதியில் சனிக்கிழமை இரவு முதலே பல இடங்களில் மழை பெய்து வந்தது. இந்நிலையில், இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இதுதொடர்பான பல்வேறு வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தொடர் கனமழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
குறைந்த விலையில் தாய்லாந்தில் நியூ இயர் கொண்டாட ஆசையா..சூப்பரான ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ்..