அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்.! அகவிலைப்படி உயர்வு - முதல்வர் இன்று அறிவிக்க வாய்ப்பு ?

By Raghupati R  |  First Published May 7, 2022, 10:41 AM IST

திமுக ஆட்சி பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறும் நிலையில் இன்றைய தினத்தில் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க ஸ்டாலின் பல புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 


தமிழக சட்டப்பேரவை கடந்த மாதம் 6ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் நாளான கடந்த 6ஆம் தேதி நீர்வளத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கப்பட்டது.  சட்டப்பேரவை கடந்த 13ஆம் தேதி வேளாண்மை, மீன்வளம், கால்நடை, பால்வளத்துறை ஆகிய மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. 

Tap to resize

Latest Videos

இதையடுத்து 14ஆம் தேதி முதல் 17-ம் தேதி வரை 4 நாட்கள் சட்டசபைக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு  கடந்த 18 ஆம் தேதி மீண்டும் சட்டப்பேரவை கூடியது. அதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை இயற்கை சீற்றங்கள் குறித்து மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவையில் தொழில்துறை, தமிழ் வளர்ச்சி துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் கடந்த 10 ஆம் தேதி நடை பெற்றது.  நேற்று ஆதிதிராவிட நலத்துறையின் மானிய கோரிக்கை விவாதம் நடந்தது.

இந்நிலையில்  தமிழக சட்டமன்றத்தில் இன்று நிதித்துறை, சிறப்பு முயற்சிகள் துறை ,ஆளுநர், அமைச்சரவை மற்றும் பொதுத்துறை உள்ளிட்ட அரசுத் துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.  கேள்வி நேரம் இல்லாமல் இன்றைய தினம் சட்டபேரவை நடத்த அமைச்சரும்,  அவை முன்னவருமான துரைமுருகன் , சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்த நிலையில்,  இன்று கேள்வி - நேரம் இல்லாமல் சட்டப்பேரவை நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்துவதற்கான மசோதா பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அரசு ஊழியர்களின் சம்பளங்கள் வழங்கல் திருத்த மசோதாவை முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இந்த செய்தி அரசு ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : ரயில்வே தேர்வு எழுதுபவர்களுக்கு சூப்பர் நியூஸ்.! தெற்கு ரயில்வே கொடுத்த சர்ப்ரைஸ்.!!

இதையும் படிங்க : தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்பு விநாயகர் வாழ்த்து பாடல் - சர்ச்சையில் சிக்கிய வானதி சீனிவாசன் !!

click me!