எந்த ஷா வந்தாலென்ன.? டெல்லி பாதுஷாவே வந்தாலும் கருப்பு சிகப்பு படை தக்க பாடம் புகட்டும்..! ஸ்டாலின் ஆவேசம்

Published : Dec 10, 2025, 02:42 PM IST
Mk Stalin

சுருக்கம்

எந்த ஷா வந்தாலென்ன? எத்தனை திட்டம் போட்டாலென்ன? டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழ்நாட்டுக்கு வர நினைத்தால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எங்களது கருப்பு சிவப்புப் படை உங்களுக்குத் தக்க பாடம் புகட்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று மயிலாப்பூர் தொகுதியில் உள்ள தனது வாக்குச்சாவடியில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த வாக்குச்சாவடியில் 440 வாக்குகளை இலக்காக நிர்ணயித்து ஒவ்வொரு வாக்குச்சாவடி உறுப்பினருக்கும் அவரவர் இலக்கை முதலமைச்சர் நிர்ணயித்து கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து முதல்வர் தனது எக்ஸ் தளப் பதிவில் “எந்த ஷா வந்தாலென்ன? எத்தனை திட்டம் போட்டாலென்ன?

டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழ்நாட்டுக்கு வர நினைத்தால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எங்களது கருப்பு சிவப்புப் படை உங்களுக்குத் தக்க பாடம் புகட்டும்!

தமிழ்நாடு என்றைக்குமே ஆணவம் பிடித்த டெல்லிக்கு Out of Control தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி
கலைஞருக்கு பாரத ரத்னா விருது வேண்டும்.. மக்களவையில் தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை