முதல்வர் ஸ்டாலின் தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடினார்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 71ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளையொட்டி, கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்று, தனது தந்தை கலைஞர் கருணாநிதி உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலிம், தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்து பெற்றார். அதைத்தொடர்ந்து, சிஐடி காலனியில் உள்ள கலைஞர் கருணாநிதி இல்லத்துக்கு சென்ற முதல்வர், அங்கு கருணாநிதி படத்துக்கு மரியாதை செலுத்திவிட்டு, ராசாத்தி அம்மாளிடம் வாழ்த்து பெற்றார்.
இதையடுத்து, காலை 8 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அறிஞர் அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இதையடுத்து, சென்னை வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
விபத்தில் காயமடைந்த நபர்: ஓடி வந்து மீட்ட அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!
தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி, நேரிலும், தொலைபேசியிலும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி, கேரள முதல்வர் பினராயி விஜயன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மல்லிகார்ஜுன கார்கே என பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, முதல்வர் ஸ்டாலின் தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். சித்தரஞ்சன் சாலையில் உள்ள தனது இல்லத்தில் குடும்பத்தினருடன் கேக் வெட்டி முதல்வர் ஸ்டாலின் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மருமகள், மருமகன், சகோதரி என அவரது குடும்பத்தினர் அனைவரும் அங்கு திரண்டிருந்தனர். கேக் வெட்டிய முதல்வர் ஸ்டாலின், தனது மனைவி, மகன் உதயநிதிக்கு அதனை ஊட்டி விட்டார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா இன்று மாநிலம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. திமுகவினர் பல்வேறு நிகழ்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.