நானும் உதயநிதியும் அண்ணன் தம்பி தான்.. ஸ்டாலின் சொன்ன சுவாரஸ்ய தகவல். .

Published : Aug 21, 2022, 10:52 AM IST
நானும் உதயநிதியும் அண்ணன் தம்பி தான்.. ஸ்டாலின் சொன்ன சுவாரஸ்ய தகவல். .

சுருக்கம்

கொரோனா தொற்றிலிருந்து இருந்து இரண்டு,மூன்று நாட்களில் மீண்டதற்கு காரணம் எனது உடற்பயிற்சி என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். எனது வயதை சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். நானும் எனது மகனும் ஒன்றாக சென்றால் அண்ணன் தம்பி என்று கூறுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

பேட்மிட்டன் விளையாடி மகிழ்ந்த ஸ்டாலின்

சென்னை அண்ணா நகரில் நடைபெற்ற “Happy Streets” நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். ஒவ்வொரு சாலையிலும் ஞாயிற்று கிழமைகளில் காலை 6 முதல் 9 மணி வரை சுமார் 800 முதல் 1000 மீட்டர் வரையிலான சாலையில் 5 வாரங்களுக்கு "ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ்" நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த சாலைகளில் 3 மணி நேரத்திற்கு முழுவதுமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு ஹாப்பி ஸ்ட்ரீட்ஸ் - நோக்கங்கள் தொடர்பான நடனம், பாட்டு, இசை நிகழ்ச்சிகள், இலவச சைக்கிள் பயணம், ஸ்கேட்டிங், கயிறு இழுத்தல், கைப்பந்து, பூப்பந்து போன்ற விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.  இந்த நிகழ்ச்சியில் தமிழகம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு, கூடைப்பந்து, பேட்மிட்டன்,டேபிள் டென்னிஸ், ஆகிய விளையாட்டுகளை விளையாடி உற்சாகத்தை ஏற்படுத்தினார். சுமார் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு நடந்து சென்ற முதலமைச்சருடன் பொதுமக்கள் மற்றும் ஸ்கேட்டிங் விளையாட்டில் ஈடுபட்டிருந்த சிறுவர், சிறுமியர்கள் பெற்றோர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். 

பிரபல ஓட்டல் உணவில் புழு,பூச்சி...! உணவகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஓபிஎஸ்

எனது வயதை யாரும் நம்பமாட்டார்கள்

இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மாலையில் ஜிம்மில் உடற்பயிற்சி, காலையில் யோகா ஐந்து கிலோமீட்டர் வாக்கிங் செல்கிறேன். எனக்கு வயது 69, 70 வயதை நெருங்குவதாக கூறினார்.  மகிழ்ச்சியான தெரு என்ற தலைப்பில் மூன்று மாதங்களாக இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. கடந்த முறை இந்த நிகழ்ச்சிக்கு வருவதாக ஒப்புக்கொண்டிருந்தேன்.  கொரோனா தொற்றால் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. கொரோனா தொற்றிலிருந்து இருந்து இரண்டு மூன்று நாட்களில் மீண்டதற்கு காரணம் எனது உடற்பயிற்சி என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். எனது வயதை சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். நானும் எனது மகனும் சென்றால் அண்ணன் தம்பி என்று கூறுவார்கள். எனக்கு  வாய்ப்பு கிடைக்கும்போது  உடலை பாதுகாக்க அக்கறை எடுத்துக் கொள்வேன் . வயிறு முட்ட உணவு உட்கொள்ளக் கூடாது. எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும், உடற்பயிற்சி மேற்கொண்டால் எந்த டென்ஷன் இல்லாமல் இருக்கலாம். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சென்னையில் இருந்தாலும் வெளி மாவட்டங்களுக்கு சென்றாலும் வெளிநாடுகளுக்கு சென்றாலும் உடற்பயிற்சி மேற்கொண்டு வருவதாக ஸ்டாலின் தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

பரந்தூரில் புதிய விமான நிலையம்..! அதிக விலைக்கு பத்திர பதிவா..? அமைச்சர் மூர்த்தி விளக்கம்

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ராமஜெயம் கொலை வழக்கில் எதிர்பாராத ட்விஸ்ட்! பிளான் போட்ட இடம் இதுதானா? குற்றவாளியை நெருங்கும் வருண் குமார்?
ஷாக்கிங் நியூஸ்! பயங்கர சத்தத்துடன் ஃபிரிட்ஜ் வெடித்து தீ விபத்து! அலறிய குடும்பத்தினர் நிலை என்ன?