மதராஸ் முதல் சென்னை வரை.. நாம் தொலைத்த முக்கிய மூன்று விடயங்கள்.. சற்று திரும்பி பார்ப்போம்..

By Thanalakshmi VFirst Published Aug 21, 2022, 10:42 AM IST
Highlights

சென்னை மாநகரம் உருவாகி இன்றுடன் 383 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆம், 1939 ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 22 ஆம் தேதியை நாம் மெட்ராஸ் தினம் அல்லது சென்னை தினம் என்று கொண்டாடி வருகின்றோம். இன்று பல கோடி மக்களுக்கு வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருக்கும் சென்னை பெருநகரம் உருவான வரலாறு, மிக நீண்டது. சென்னை மாநகரம் உருவாகி இன்றுடன் 383 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆம், 1939 ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 22 ஆம் தேதியை நாம் மெட்ராஸ் தினம் அல்லது சென்னை தினம் என்று கொண்டாடி வருகின்றோம். இன்று பல கோடி மக்களுக்கு வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருக்கும் சென்னை பெருநகரம் உருவான வரலாறு, மிக நீண்டது. 

சென்னை மாநகரம் உருவாகி இன்றுடன் 383 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆம், 1939 ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 22 ஆம் தேதியை நாம் மெட்ராஸ் தினம் அல்லது சென்னை தினம் என்று கொண்டாடி வருகின்றோம். இன்று பல கோடி மக்களுக்கு வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருக்கும் சென்னை பெருநகரம் உருவான வரலாறு, மிக நீண்டது. அன்று முதல் இன்று வரை தன்னுள் பல்வேறு சுவடுகளை புதைத்து வைத்திருக்கும் சென்னை, எப்பொழுதும் மக்களுக்கு பிடித்த நகரங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. வரத்த ரீதியாக பல சாதனைகளை புரிந்து மதராஸ்பட்டினம் என்று பெயர் பெற்று, ’சென்னை’யா இன்று நிமிர்ந்து நிற்கிறது.

நம்ம சென்னை - நம்ம பெருமை: 

சென்னை என்று சொன்னாலே மக்களுக்கு மனதில் தனி உணர்வு உண்டு. பலதரப்பட்ட மக்களோடு வாழும் சூழல் இங்கு கிடைக்கிறது. சாதி, மதங்களை கடந்து அன்புடன் பழகும் மக்களை சென்னையில் காணலாம். குறிப்பாக, நாட்டில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பொருளாதார ரீதியாக சென்னைக்கு இடபெயர்ந்து, வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகம். பல்வேறு தேசங்களிலிருந்து வேலைக்காக இன்றளவும் கூட சென்னையை நோக்கி வரும் இளைஞர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது.  வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு சிறந்த உதாரணமாக சென்னை விளங்குகிறது.

மதராஸ்பட்டினம்: 

பல்வேறு மொழிகள் பேசும் மக்களை ஒன்றிணைக்கும் ஒரு நகரமாக சென்னை உள்ளது.   1639 ஆம் ஆண்டு மதராசப்பட்டினம் எனும் கிராமத்தை கிழக்கிந்திய கம்பெனி விற்ற நாளை தான் சென்னை தினமாக கொண்டாடி வருகிறோம் . பின்னர் மெட்ராஸ் என்று உருமாறி, பின்பு  “சென்னை” என்று  1996ஆம் ஆண்டு பெயர் மாற்றப்பட்டது. 
தற்போது சென்னை என மாற்றம் செய்யப்பட்டு விட்டதால் “சென்னை தினம்” என்று கொண்டாடி வருகிறோம்.  ஆனால் இந்நகரம் 383 ஆண்டுகளுக்கு முன் உருவாகி பல்வேறு கட்டமைப்புகளை தன்னுள் சுமந்து நிற்கிறது. ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இன்று வரை சென்னையில் மூன்று முக்கிய விடயங்களை நாம் நினைவு கூறவேண்டும். அவற்றை தற்போது பார்க்கலாம்.

பக்கிங்ஹாம் கால்வாய்: 

ஆந்திர பிரதேசத்திலிருந்து விழுப்புரம் வரை 420 கிமீ ஓடும் மிக பெரிய கால்வாய். 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் மிக முக்கிய நீர்வழியாக இது விளங்கியது. சோழமண்டலக் கடற்கரைக்கு இணையாக ஓடும் கால்வாய். இந்த கால்வாய் ஆந்திரப்பிரதேசத்தின் விஜயவாடாவில் இருந்து தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் வரை செல்கிறது. உப்பு நீர் ஓடும் இக்கால்வாய், ஆங்கில ஆட்சியின் போது அமைக்கப்பட்டது. இக்கால்வாய் கடற்கரையில் இருந்து சென்னைக்கு பொருட்களைக் கொண்டு செல்ல முதன்மையாகப் பயன்படுத்தப்பட்டது.

மேலும் படிக்க:Madras Day 2022: சிங்கார சென்னை முதன் முதலில் எப்படி தோன்றியது தெரியுமா.? பிரமிக்க வைக்கும் மெட்ராஸ் வரலாறு..

சென்னைக்குள் பல்வேறு பகுதிகளிலிருந்து பொருட்களை கொண்டு வரவும் இங்கிருந்து பல்வேறு பகுதியிலிருந்து பொருட்களை எடுத்து செல்லவும் வர்த்தகத்தை குறிக்கோளாக வைத்து அங்கிலேயர்களால் இந்த கால்வாய் கண்டுபிடிக்கப்பட்டு, மறு சீரமைப்பு செய்யப்பட்டது. இந்த கால்வாய் சென்னைக்குள் மட்டுமின்றி ஆந்திரா வரை 800 கிலோமீட்டருக்கும் மேல் நீண்டிருந்தது. இதனை ஆங்கிலேயர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டனர். 

1870 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பஞ்சத்தின் போது, இந்த கால்வாய் மூலம் தான் சென்னைக்கு உணவு தானியங்கள் கொண்டு வரப்பட்டது. தற்போது இதன் நிலை தலைகீழாக மாறிவிட்டது. வீடுகள், கட்டிடங்கள், தொழிற்சாலைகள் என பல்வேறு ஆக்கிரமிப்புகளால் கால்வாயின் அகலம் குறைந்துவிட்டது.  அப்போது படகு மூலம்  பயணம் செய்யும் அளவிற்கு நல்ல நிலையில் இந்த கால்வாய், தற்போது கழிவுகளால் மாசடைந்தது. முற்றிலும் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. 

டிராம் வண்டிகள்: 

ஆங்கிலேயர்கள் காலத்தில் கொண்டுவரப்பட்டதில் முக்கியமான இன்னொன்று என்றால் அது டிராம் வண்டி. இந்த வண்டி பேருந்து போன்று சாலையிலும் செல்லும், ரயிலகள் போல தண்டவாளத்திலும் செல்லும். அந்த காலத்தில் புழக்கத்தில் இருந்த குதிரை வண்டிகள், கை ரிக்‌ஷா போல் அல்லாமல், இது மிகவும் வித்தியாசமாக இருந்தது. தற்போதைய பேருந்துகளை போல டிராம் வண்டிகளில் நடத்துனர் ஒருவர் இருப்பார். அவரிடம் டிக்கெட் பெற்று பயணம் மேற்கொள்ள வேண்டும். ஆர்யா நடிப்பில் வெளிவந்த மதராஸ்பட்டினம் படத்தில் கூட டிராம் வண்டிகள் செல்லும் காட்சிகள் காண்பிக்கப்பட்டிருக்கும். சென்னை நகரில் 1877ல் தொடங்கி 1953 வரை சுமார் 80 ஆண்டுகள் டிராம் வண்டிகள் வலம் வந்தன. அதன் பிறகு கடும் நஷ்டம் காரணமாக டிராம் வண்டிகளை இயக்கி வந்த நிறுவனம் தொடர்ந்து செயல்படுத்தவில்லை. 

டபுள் டெக்கர் பேருந்து : 

இந்திய நாட்டிலேயே முதல்முறை டபுள் டெக்கர் பேருந்து மும்பையில் இயக்கப்பட்டது. பின்னர் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டு சென்னையிலும் பயன்பாட்டிற்கு வந்தது. அன்றைய காலக்கட்டத்தில், சென்னையில் தினசரி போக்குவரத்துக்களில் டபுள் டெக்கர் பேருந்தும் ஒன்றாக இருந்தது. தொடங்கப்பட்ட போது இரண்டு அடுக்குகளில் பார்ப்பதற்கு பிரம்மாண்டமாய் இருக்கும் இந்த பேருந்தில், மக்கள் ஆர்வத்துடன் பயணித்தனர்.  மேலும் சென்னை நோக்கி வரும் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்தது. ஆனால் இதில் குறைந்த வேகத்தில் தான் செல்ல முடியும். அதுமட்டுமின்றி, இந்த பேருந்தை பாராமரிப்பதற்கான செலவும் மிக அதிக. மேலும் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்ததால், ஒருகட்டத்தில் இந்த வகை பேருந்துகள் வழக்கொழிந்து போகின. இதுபோன்று அன்று முதல் இன்று வரை சென்னையில் பதித்துள்ள வரலாற்று சுவடுகள் ஏராளம். ஒன்று ஒன்றாக தேடி பார்த்து, அதன் பழமையை தெரிந்துக்கொள்ளுவோம்.. ஏனென்றால் ”நம்ம சென்னை நம்ம பெருமை”

மேலும் படிக்க:சென்னையின் முதல் ரயில் நிலையம் எது தெரியுமா ? கண்டிப்பா சென்ட்ரல் கிடையாது ? #சென்னைதினம்

click me!