அரியலூர் மருத்துவக் கல்லூரி புதிய அரங்குக்கு மாணவி அனிதா பெயர் சூட்டப்படும்.! மு.க.ஸ்டாலின் உத்தரவு

Published : Mar 14, 2023, 11:16 AM IST
அரியலூர் மருத்துவக் கல்லூரி புதிய அரங்குக்கு மாணவி அனிதா பெயர் சூட்டப்படும்.! மு.க.ஸ்டாலின் உத்தரவு

சுருக்கம்

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரியில், 22 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய அரங்குக்கு அனிதா பெயர் சூட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மாணவி அனிதா பெயர் சூட்ட உத்தரவு

நீட்தேர்வை ரத்து செய்துவிட்டு, பிளஸ்–2 மதிப்பெண்களின் அடிப்படையில்தான் மருத்துவ மாணவர்களின் சேர்க்கை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மாணவி அனிதா வழக்கு தொடர்ந்தார். மாணவி அனிதா பிளஸ்–2 தேர்வில் 1,200–க்கு 1,176 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.  கட்–ஆப் மார்க் 200–க்கு 196.75 ஆகு இருந்தது. ஆனால் நீட் தேர்வில் அவருக்கு கிடைத்தது 720–க்கு 86 மதிப்பெண்கள்தான் அனிதாவிற்கு கிடைத்தது. இதன் காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தில் அனிதா வீட்டில் 2017ஆம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவரது மரணம் தமிழகம் மட்டுமில்லாமல் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாகியது.இந்தநிலையில் அரியலூரில் மருத்துவ கல்லூரியில் 22 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய அரங்குக்கு அனிதா பெயர் சூட்ட தொடர்ந்து கோரிக்கை எழுந்தது.

இதெல்லாம் வெட்கக்கேடு! செல்போனை திருடி பிழைக்கணும்னு அவருக்கு அவசியமில்லை! இபிஎஸ் முட்டுக்கொடுக்கும் பிரேமலதா

இந்தநிலையில்அந்த அரங்கிற்கு மாணவி அனிதா பெயரை சூட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஏழை கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வுக்குத் தயாராவதற்குத் தேவையான விலையுயர்ந்த சாத்தியமில்லை என்பதையும், நீட் தேர்வு பயிற்சிகளை 12-ஆம் பெறுவது வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில், மருத்துவ சேர்க்கை தேர்வுகள் நடத்தப்பட்டால் மட்டுமே. தன்னை போன்ற கிராமப்புற மாணவர்கள் மருத்துவ இடங்களைப் பெற முடியும் என்பதையும் உணர்ந்து, நீட் தேர்வு கிராமப்புற மாணவர்களின் நலன்களுக்கு எதிரானது என அனிதா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நீட் தேர்வின் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்ற இந்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு, தீர்ப்பு வெளியான ஒன்பது நாட்களில் அனிதா தனது இன்னுயிரை 2017 செப்டம்பர் 1-ம் நாள் மாய்த்துக் கொண்டார். அவரது மரணம் நீட் தேர்வு முறையின் கொடூரத்தை உலகுக்கு உணர்த்தியது.

அண்ணாமலை தலைவரான பின் மூத்த நிர்வாகிகளுக்கு மரியாதையே இல்லை... முன்னாள் பாஜக நிர்வாகி குற்றச்சாட்டு!!

திராவிட முன்னேற்றக் கழக அரசு தமிழ்நாட்டில் பொறுப்பேற்றவுடன் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் திரு. ஏ.கே. ராஜன் அவர்கள் தலைமையில் குழுவை அமைத்து, அந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் அமைந்த அரசு செயலாளர்கள் குழுவினால் பரிந்துரைக்கப்பட்டு தமிழ்நாடு அரசு, சட்டமன்றத்தில் நீட் எதிர்ப்பு மசோதாவை நிறைவேற்றி மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்களுக்கு அனுப்பியது. மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்களால் அம்மசோதா திருப்பி அனுப்பப்பட்டது. மீண்டும் அந்த மசோதா தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு மாண்புமிகு ஆளுநர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த மசோதாவிற்கு ஒன்றிய அரசு விரைவில் ஒப்புதல் தர வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

அரியலூர் மருத்துவக் கல்லூரி வளாகம் 2022 ஜனவரி 12-அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தற்போது இந்த புதிய மருத்துவக் கல்லூரியில் நவீன மருத்துவமனை கட்டப்பட்டு, இம்மாவட்ட மக்களின் நலனிற்காக இன்று திறந்து வைக்கப்பட உள்ளது. இவ்வேளையில் நீட் எனும் தேர்வினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நிகழ்த்தி, தனது இன்னுயிரை இழந்த அனிதா அவர்களின் நினைவாக அரியலூர் மாவட்டம், அரியலூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில், 22 கோடி ரூபாய் செலவில், 850 பேர் அமரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்திற்கு "அனிதா நினைவு அரங்கம்" என பெயர் சூட்டப்படும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

எடப்பாடி பழனிசாமி அரசியல் அநாதையாகி விடுவார்... செல்வ பெருந்தகை சாடல்!!
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Tamil News Live today 09 December 2025: பலத்த கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் புதுவையில் பொதுக்கூட்டம் நடத்தும் விஜய்
விஜய் எண்ட்ரி.. மாநிலத்தின் மொத்த போலீஸ் படையையும் களம் இறக்கிய ரங்கசாமி..