
12ஆம் வகுப்பு தேர்வு
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று தொடங்கியது. மாணவர்கள் தேர்வை அச்சமில்லாமல் எழுத வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தனர். மேலும் பள்ளிக்கல்வித்துறை சார்பாக மாணவர்களுக்கு கட்டுப்பாடும் விதிக்கப்பட்டது. அதில் தேர்வு அறையில் மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை. மீறினால் துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுத்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து பிடிபடும் மாணவர்கள் தேர்வெழுத வாழ்நாள் தடை, முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்கள் ஓராண்டு தேர்வெழுத தடை விதிக்கப்படும். மேலும் ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாக செயல்படும் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது.
50ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட்
இந்தநிலையில் இந்த தேர்வில் தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 51 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் 8 லட்சத்து ஆயிரத்து 744 பேர் மட்டுமே மொழி பாடத்தேர்வு தேர்வு எழுதியுள்ளனர். இதில் 50, 674 பேர் முதல் நாளில் ஆப்சென்ட் ஆகியுள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 50 ஆயிரம் பேர் ஆப்சென்ட் ஆனது வழக்கமான ஒன்று என தெரிவித்துள்ளனர். கடந்த காலங்களில் 5% வரை மாணவர்கள் தேர்வு எழுத வராமல் இருந்துள்ளதாக தெரிவித்தனர். இந்தநிலையில் முதல் தேர்வையே 50 ஆயிரம் மாணவர்கள் புறக்கணித்த நிலையில் வரும் நாட்களில் மாணவர்கள் ஆர்வமாக தேர்வு எழுத வருவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படியுங்கள்