இன்று முதல் வரும் 25-ம் தேதி வரை தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இந்த பிப்ரவரி மாத இறுதியிலேயே கோடை வெயில் தொடங்கி விட்டது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். ஏப்ரல் முதல் ஜூன் வரை வெப்ப அலை வீசும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வீட்டை விட்டு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த மாத தொடக்கத்தில் கன்னியாகுமர், நெல்லை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கோடை மழை பெய்தது. ஆனால் மற்ற இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது.
இந்த நிலையில் இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ தமிழக பகுதிகளின் மேன் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் நாளையும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
24, 25 ஆகிய தேதிகளில் தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 26, 27 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் வறண்ட வானிலையே நிலவும். இன்று முதல் வரும் 25-ம் தேதி வரை தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரீ ரிலீசாகும் படத்திற்கு வரும் கூட்டம் கூட வாக்களிக்க வருவதில்லை; இயக்குநர் ஹரி வருத்தம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் நாளையும் 104 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் வெப்பம் பதிவாகும் என்றூம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.