4 நாளைக்கு தண்ணீர் வராது.. முன்னாடியே புடிச்சு வச்சுக்கோங்க.. எச்சரிக்கை விடுக்கும் சென்னை குடிநீர் வாரியம்!!

By Narendran SFirst Published Mar 6, 2022, 6:31 PM IST
Highlights

சென்னை குடிநீர் வினியோகம் 4 நாட்களுக்கு நிறுத்தப்படும் என்றும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான தண்ணீரை சேமித்து வைத்துக்கொள்ளமாறும் சென்னை குடிநீர் வாரியம் அறிவுறுத்தியுள்ளது. 

சென்னை குடிநீர் வினியோகம் 4 நாட்களுக்கு நிறுத்தப்படும் என்றும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான தண்ணீரை சேமித்து வைத்துக்கொள்ளமாறும் சென்னை குடிநீர் வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதுக்குறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை அடுத்த மீஞ்சூர் காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் வருகிற 8 ஆம் தேதி காலை 8 மணி முதல் 11 ஆம் தேதி காலை 11 மணி வரை, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக வடசென்னை பகுதியில் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மேலும் மாதவரம், மணலி, திருவொற்றியூர், எர்ணாவூர், கத்திவாக்கம், பட்டேல் நகர், வியாசர்பாடி ஆகிய பகுதிகளுக்கும் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட உள்ளது. பகுதி-1, 2, 3 மற்றும்‌ 4 உட்பட்ட பகுதிகளுக்கு மாற்று ஏற்பாடாக புழல்‌ குடிநீர்‌ சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர்‌ வழங்கப்படும்‌. வடசென்னை பகுதிகளான மாதவரம்‌, மணலி, திருவொற்றியூர்‌, எர்ணாவூர்‌. கத்திவாக்கம்‌, பட்டேல்‌ நகம்‌, வியாசர்பாடி போன்ற பகுதிகளுக்கு குடிநீர்‌ விநியோகம்‌ நிறுத்தம்‌ செய்யப்படுகிறது.

மாற்று ஏற்படாக புழலில்‌ அமைந்துள்ள 300 எம்‌.எஸ்.டி குடிநீர்‌ சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து மேற்கண்ட பகுதிகளுக்கு 08.03.2022 அன்று காலை 8.00 மணி முதல்‌ 11.03.2022 காலை 10.00 மணி வரை குடிநீர்‌ வழங்கப்படும். இதனால் பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவொற்றியூர், எர்ணாவூர், கத்திவாக்கம் பகுதிகளுக்கு லாரிகளில் குடிநீர் தேவைப்படுவோர் 8144930901 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும், மணலிக்கு 8144930902, மாதவரத்திற்கு 8144930903, வியாசர்பாடி பட்டேல் நகருக்கு தலைமை அலுவலக புகார் பிரிவு எண்கள் 044-45674567, 044-2845 1300 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று சென்னை குடிநீர்‌ வாரியம்‌ தெரிவித்துள்ளது.

click me!