Tamilnadu Rains : உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கப்போகுது !!

Published : Mar 06, 2022, 11:33 AM IST
Tamilnadu Rains : உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கப்போகுது !!

சுருக்கம்

காற்றுழத்த தாழ்வு மண்டலம் வட தமிழ்நாட்டின் கரையை 36 மணிநேரத்தில் நெருங்கும் என்றும், காற்றுழத்த தாழ்வு மண்டலத்தால் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என்றும்  வானிலை மையம் அறிவித்து இருக்கிறது.

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 270 கி.மீ தூரத்தில் நீடிக்கிறது.13 கி.மீ வேகத்தில் நகரும் ஆழ்ந்த காற்றுழத்த தாழ்வு மண்டலம் வட தமிழ்நாட்டின் கரையை 36 மணிநேரத்தில் நெருங்கும் என்றும், காற்றுழத்த தாழ்வு மண்டலத்தால் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

தமிழகத்தில் மார்ச் 9-ஆம் தேதி வரை மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.அந்த வகையில்,தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்.

மேலும், இன்று டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், நாளை தஞ்சை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. அதைப் போல,தஞ்சை,திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, செங்கல்பட்டு ஆகிய 15 மாவட்டங்களிலும் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, திருப்பூரில் ஓரிரு இடங்களில் நாளை மறுநாள் (மார்ச் 8-ல்) கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,தமிழகத்தில் இன்று மற்றும் நாளை  5 மாவட்டங்களில் தரைக்காற்று பலமாக வீசும் என்றும் கூறியுள்ளது.

இதனிடையே,இன்று கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். உள்மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ரூ.18 கோடி வரி செலுத்துங்கள்..! பிரியாணி மாஸ்டரை அதிர வைத்த ஜி.எஸ்.டி நோட்டீஸ்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!