சென்னையில் பள்ளிகளுக்கு மதியத்துக்கு மேல் விடுமுறை

Asianet News Tamil  
Published : Jan 23, 2017, 01:44 PM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
சென்னையில் பள்ளிகளுக்கு மதியத்துக்கு மேல் விடுமுறை

சுருக்கம்

ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதையொட்டி இன்று அதிகாலை முதல் அனைத்து பகுதிகளிலும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை, போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி வருகின்றனர்.

இதைதொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களையும், போலீசார் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், நகரம் முழுவதும் போர்க்களம் போல் காட்சியளிக்கிறது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, இன்று காலை திறக்கப்பட்டது. ஆனால், சென்னை நகர் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்து வருவதால், இன்று மதியத்துக்கு பின், அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai Scheme: வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்.. அப்போ ரூ.2500 மகளிர் உரிமைத்தொகை கிடையதா?
UPSC Free Coaching: ரூ.9,000 ஊக்கத்தொகையுடன்.. யுபிஎஸ்சி மெயின்ஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி! தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!