சென்னையில் ஒரு அதிகாலை அதிசயம்… முழித்து பார்த்த மக்கள் ஆச்சரியம்

Published : Oct 05, 2021, 08:15 AM IST
சென்னையில் ஒரு அதிகாலை அதிசயம்… முழித்து பார்த்த மக்கள் ஆச்சரியம்

சுருக்கம்

சென்னையில் அதிகாலையில் பரவலாக பல இடங்களில் மழை பெய்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை:  சென்னையில் அதிகாலையில் பரவலாக பல இடங்களில் மழை பெய்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தென்மேற்கு வங்ககடல் மற்றும்  அதன் கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

அதன்படி, கோவை, ஈரோடு, நீலகிரி, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை கொட்டி வருகிறது. இந்த மழை மேலும் கனமழையாக நீடிக்கும் என்று வானிலை மையம் கூறி இருந்தது.

இந் நிலையில் தலைநகர் சென்னையில் இன்று அதிகாலை நகரின் பல இடங்களில் மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக சென்னை சென்ட்ரல், கீழ்ப்பாக்கம், சேத்துபட்டு, புரவைவாக்கம், எழும்பூர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்தது. மழையில் காரணமாக சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.

அதிகாலை நேரத்து மழை என்பதால் நடைபயிற்சி சென்றவர்கள் மழையை ரசித்துக் கொண்டே சென்றனர். இன்றும் சென்னையில் மழை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

நெஞ்சை உருக்கும் சோகம்..! அரசு பள்ளி சுவர் இடிந்து விழுந்து 7ம் வகுப்பு மாணவன் பலி..!
செங்கோட்டையனுக்கு சின்ன சங்கடமோ, மரியாதை குறைவோ வந்துடக்கூடாது..! புஸ்சியிடம் விஜய் போட்ட உத்தரவு