இதுதான் சூப்பர்…! ‘ஹேப்பி’ தந்த தமிழகத்தின் கொரோனா லேட்டஸ்ட் நிலவரம்

Published : Oct 04, 2021, 09:21 PM ISTUpdated : Oct 04, 2021, 09:23 PM IST
இதுதான் சூப்பர்…! ‘ஹேப்பி’ தந்த தமிழகத்தின் கொரோனா லேட்டஸ்ட் நிலவரம்

சுருக்கம்

தமிழகத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1500க்கும் கீழாக குறைந்துள்ளது.

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1500க்கும் கீழாக குறைந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த பல நாட்களாக கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பின் விவரம் வருமாறு:

தமிழகத்தில் 1,48,749 மாதிரிகள் சோதிக்கப்பட்டதில் 1467 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. சென்னையில் கொரோனா 181 ஆக உயர்ந்திருக்கிறது. 1559 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணம் பெற்ற நிலையில் டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 26,12,432 ஆக உயர்ந்துள்ளது.

ஒரு நாளில் 16 பேர் கொரோனாவுக்கு பலியாக ஒட்டு மொத்த உயிரிழப்பு 35,666 ஆக பதிவாகி உள்ளது. 16 பேரில் அரசு மருத்துவமனைகளில் 10 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 6 பேரும் பலியாகி உள்ளனர்.

கோவையில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 155 ஆக குறைந்துள்ளது. ஈரோட்டில் 88, செங்கல்பட்டில் 103 ஆக கொரோனா தொற்று பதிவாகி இருக்கிறது. திருவள்ளூரில் 60, சேலம், 51, திருச்சி 58 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

PREV
click me!

Recommended Stories

திருப்பரங்குன்ற தீபத்தூண்- நீதிபதி சுவாமிநாதனுக்கு தடையில்லை..! உயர் நீதிமன்ற அமர்வு அதிரடி
நீதிபதி சாமிநாதனுக்கு எதிராக கையெழுத்து போட்ட எம்.பி.க்களை உடனே தூக்க வேண்டும்..! அண்ணாமலை ஆவேச பேச்சு