Fine For Irfan : தனது உணவு ரிவியூ மூலம் புகழ்பெற்ற இர்ஃபான், இன்று தமிழகத்தின் டாப் YouTuber என்ற அந்தஸ்திற்கு உயர்ந்துள்ளார் என்றே கூறலாம்.
இந்த டிஜிட்டல் யுகத்தை பொருத்தவரை, தங்களுடைய திறமைகளை சரியாக பயன்படுத்தி அதன் மூலம் பெரிய புகழையும், ஆடம்பர வாழ்வினையும் அடைய முடியும் என்பதற்கு சான்றாக பலர் உள்ளனர். அந்த வகையில் உணவகங்களுக்கு சென்று, அங்குள்ள உணவுகளை ரிவ்யூ செய்வதன் மூலம், மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் YouTuber இர்ஃபான்.
இன்று மிகப்பெரிய வெள்ளித்திரை நட்சத்திரங்களை கூட, தனது YouTube சேனலுக்கு அழைத்து பேட்டி காணும் அளவிற்கு மிகப்பெரிய புகழை அடைந்திருக்கிறார் என்றால் அது மிகையல்ல. புகழின் உச்சிக்கு செல்லும் அதே நேரம், பல சர்ச்சைகளிலும் YouTuber இர்ஃபான் தொடர்ச்சியாக சிக்கி வருகின்றார் என்பது அனைவரும் அறிந்ததே.
செம க்யூட்... அனோஷ்கோ உடன் ஷாலினி.. ஆத்விக் உடன் அஜித்.. வைரலாகும் ஃபேமிலி போட்டோ..
குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி அருகே அவர் சென்ற வாகனம் மோதி, ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக பெரும் சர்ச்சை வெடித்தது. அதனைத் தொடர்ந்து அவரது மனைவிக்கு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை பொதுவெளியில் முன்கூட்டியே அறிவித்ததும் பெரும் பிரச்சனையானது. ஆனால் ஆளும் கட்சியின் துணை இருப்பதினால் அதிலிருந்து இர்ஃபான் எளிதில் தப்பித்து விடுகிறார் என்றும் அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.
இதுஒருபுரம் என்றால் பிரியாணி மேன் என்கின்ற YouTuberக்கும், இர்ஃபானுக்கும் இடையே பனிப்போர் நிலவியது. இறுதியில் தனது YouTube சேனல் லைவ் டெலிகாஸ்டில் தற்கொலைக்கு முயன்ற பிரியாணி மேன், சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்டதும் பெரும் பரபரப்புகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் சுமார் 10 மாதங்களுக்கு முன்பு இர்ஃபான் போட்ட வீடியோ ஒன்று இப்பொது அவருக்கே சிக்கலாக மாறியுள்ளது.
இர்ஃபான் தான் வாங்கிய புது பைக் ஒன்றை சாலையில் ஓட்டுவது போல வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அது அப்பொழுது மிகப்பெரிய அளவில் வைரலானது, ஆனால் தற்பொழுது மீண்டும் அதே வீடியோ வைரலாகி வரும் நிலையில், "இதுவே ஹெல்மெட் போடாமல் எங்கள் டிடிஎஃப் வாசன் வண்டியை ஓட்டிருந்தால் இந்நேரம் கதையே வேற, ஆனால் எங்கள் அண்ணன் இர்ஃபான் மீது கேஸ் போட முடியுமா?" என்று நெட்டிசன்கள் கருத்துக்களை பறக்கவிட, சென்னை மாநகர காவல் துறை உடனடியாக ரியாக்ட் செய்துள்ளது.
நம்பர் பிளேட் சரியாக பொருத்தப்படாமல் வாகனத்தை ஓட்டியதற்காக 500 ரூபாயும், ஹெல்மெட் போடாமல் வண்டி ஓட்டியதற்காக ஆயிரம் ரூபாயும் இப்பொழுது இர்ஃபானுக்கு அபராதம் விதித்துள்ளனர்.