Breaking News : ஆம்ஸ்ட்ராங் கொலை... சென்னை போலீஸ் கமிஷனர் அதிரடி இடமாற்றம்- புதிய ஆணையர் யார்.?

By Ajmal Khan  |  First Published Jul 8, 2024, 12:38 PM IST

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவம் எதிரொலியாக சென்னை மாநக காவல்துறை ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டு புதிய ஆணையராக அருண் நியமிக்கப்பட்டுள்ளார்.


ஆம்ஸ்ட்ராங் கொலை- ஆணையர் பணியிடமாற்றம்

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஒரு தேசிய கட்சி தலைவருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் இருப்பதாக திமுக அரசை விமர்சிக்கப்பட்டது. மேலும் சென்னையில் கொலை சம்பவமும் போதை பொருள் விற்பனையும் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் காவல்துறை பயிற்சி கல்லூரி இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். 

Tap to resize

Latest Videos

இதனையடுத்து சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருண் சென்னை மாநகர காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசிர்வாதம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இந்த உத்தரவை தமிழக உள்துறை செயலாளர் அமுதா வெளியிட்டுள்ளார். 

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது.. அதிரடி காட்டிய தனிப்படை போலீஸ்.. பழிக்கு பழியா?

click me!