ஓராண்டுக்குள் சென்னை எல்லை சாலை பணிகள் நிறைவடையும் : அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி அறிவிப்பு!

ஓராண்டுக்குள் சென்னை எல்லை சாலை பணிகள் நிறைவடையும் : அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி அறிவிப்பு!

Published : Jul 17, 2026, 08:11 PM IST

சென்னை அடுத்த காட்டுப்பள்ளி முதல் மகாபலிபுரம் பூஞ்சேரி வரையில் சுமார் 133 கிமீ தூரம், 2468 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை எல்லை சாலை திட்டப் பணிகள் 5 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக காட்டுப்பள்ளி முதல் பஞ்செட்டி வரையிலான 25 கி.மீ. தூரம் வரை நடைபெறும் பணிகளை பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு மேற்கொண்டார். அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட போது மழை பெய்ய தொடங்கிய நிலையில், அதனை பொருட்படுத்தாமல் கொட்டும் மழையில் அவர் குடை கூட பிடிக்காமல் நனைந்தபடியே ஆய்வு மேற்கொண்டார். சாலை பணிகள் குறித்த வரைபடங்களுடன் அதிகாரிகள் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிற்கு விளக்கி எடுத்துரைத்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திருச்சியில் இருந்து 3 மணி நேரத்தில் செங்கல்பட்டு அடைந்தாலும், செங்கல்பட்டில் இருந்து பல்லாவரம் வந்து சேர மேலும் 4 மணி நேரம் எடுத்துக் கொள்வதாகவும், சென்னைக்குள் வர போக்குவரத்து அதிக அளவில் இருப்பதாகவும், கடந்த 30 - 40 ஆண்டுகளாக போக்குவரத்தை சீர் செய்ய முறையான திட்டங்கள் ஏற்படுத்தவில்லை என கூறினார். சென்னைக்கு உள்ளே வருவதற்கும், சென்னையில் இருந்து வெளியே செல்வதற்கும் தனியே திட்டம் வகுத்து வருவதாகவும், எண்ணூர் முதல் மகாபலிபுரம் வரையிலான சாலை பணிகள் 5 கட்டங்களாக நடைபெறுவதாகவும், பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனத்திற்கு பல்வேறு உதவிகள் தேவைப்படுவதால், ஆய்வு செய்து வருவதாகவும், அடுத்த ஓராண்டிற்குள் இந்த சாலை பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார். சென்னையில் உள்ள பெரும்பாலான சாலைகள் உலகத்தரத்தில் 6 வழி பாதைகளாக மாற்றப்பட்டு சென்னையில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும் என்றார். ஒப்பந்ததாரர்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்வதற்காக களத்திற்கே வந்து ஆய்வு மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார். தமிழ்நாட்டில் உள்ள சேதமடைந்த சாலைகள் சீரமைப்பு, மணல் குவாரிகள் திறப்பு தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்து ஆதார் அர்ஜுனா புறப்பட்டு சென்றார். மேல்மட்டங்களில் இல்லை என்று சொல்வதை விட ஊழல் ஒழித்தாகிவிட்டது எனவும், கீழ் மட்டத்தில் விரைவில் அனைத்தும் சரி செய்யப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

03:55சென்னை மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகள்: ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கத்தில் மழைநீர் வடிகால் ஆய்வு !
03:04சென்னையில் இலங்கை தூதரக முற்றுகைப் போராட்டம்: வேல்முருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கைது!
08:11சென்னையில் தமிழக வாழ்வுரிமை கட்சி போராட்டம்: இலங்கை துணை தூதரகம் முற்றுகை!
03:12தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் பானுமதி தனது வாக்கைப் பதிவு செய்தார்!
05:43வெற்றி வாய்ப்பை தூக்கி எறிந்துவிட்டு மீண்டும் வாக்கு கேட்பது சரியல்ல : பாஜக தலைவர் தமிழிசை பேச்சு!
03:28தாராபுரம் இடைத்தேர்தல்: மடுக்கம்பாளையம் வாக்குச்சாவடியில் தவெக வேட்பாளர் சத்யபாமா வாக்களித்தார்!
01:46மதுராந்தகம் / தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல்: வாக்களிப்பு மையங்களில் வாக்குப்பதிவு தீவிரம் !
09:38சம வேலைக்கு சம ஊதியம்: சென்னையில் 1,000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் !
05:15செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் ! பா.ஜ.க நிர்வாகி கஸ்தூரி பேட்டி
03:38நீலகிரியில் வெளுத்து வாங்கிய கனமழை : வெள்ளத்தில் மூழ்கிய வாகனங்கள் !