
செல்போன் கோபுரத்தில் திடீர் தீ !! சென்னையில் பரபரப்பு !!!
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வணிக வளாக மாடியில் உள்ள செல்போன் இணைப்பு டவரில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
நுங்கம்பாக்கம் விஜய் தொலைக்காட்சி நிலையம் அருகே தனியார் வணிக வளாகம் ஒன்று உள்ளது. இந்த வணிக வளாக மாடியில், செல்போன் இணைப்பு டவர் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த டவரில் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென அங்கிருந்த டிரான்ஸ்பார்மருக்கு பரவியது.
இது குறித்து தகவல் அறிந்ததும் நுங்கம்பாக்கம் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.