சென்னை மக்கள் ஜாக்கிரதை… வானிலை மையம் வார்னிங்…

By manimegalai aFirst Published Sep 23, 2021, 8:24 AM IST
Highlights

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று வங்கக்கடலில் உருவாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை: புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று வங்கக்கடலில் உருவாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை மழை பெய்து வருகிறது. சென்னை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த மழை கடந்த சில நாட்களாக கொட்டி வருகிறது.

மழை காரணமாக சாலைகளில் நீர் நிரம்பி வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் நீர்நிலைகள் வேகமாக நிரம்பியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந் நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று வங்கக்கடலில் உருவாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் கிட்டத்தட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

பொதுவாக வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவானால் சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை வெளுத்து கட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!