Chennai Metro Service : நாளை மறுநாள் ஜனவரி 6ஆம் தேதி சனிக்கிழமை காலை 3 மணி முதல் 5 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னையில் வருகின்ற ஜனவரி 6ஆம் தேதி சனிக்கிழமை மாரத்தான் போட்டிகள் நடக்க உள்ளது. இதன் விளைவாக அந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்க இருக்கும் நபர்கள் எந்தவிதமான இடையூறும் இன்றி உரிய இடத்தை உரிய நேரத்தில் அடைவதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
நாளை மறுநாள் ஜனவரி 6ஆம் தேதி சனிக்கிழமை காலை 3 மணி முதலே தங்களுடைய சேவைகளை துவங்க உள்ளது சென்னை மெட்ரோ. ஆகவே ஜனவரி 6ஆம் தேதி காலை 3 மணி முதல் 5 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். மேலும் சிறப்பு அம்சமாக மாரத்தான் போட்டிகளில் பங்கேற்க இருக்கும் போட்டியாளர்கள் மெட்ரோ ரயில் சேவையை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
8 மணி நேரம் ஜல்லிக்கட்டு வேண்டும், ஆன்லைன் டோக்கனை ரத்து செய்ய வேண்டும் - மாவட்ட ஆட்சியரிடம் மனு
சென்னை மெட்ரோ நிர்வாகத்திடம் உள்ள QR Code பயன்படுத்தி மாரத்தான் போட்டியில் பங்கேற்பவர்கள் இலவசமாக தங்களுடைய மெட்ரோ பயணங்களை மேற்கொள்ளலாம். இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை தற்பொழுது சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு வருகின்ற 06.01.2024 மெட்ரோ இரயில் சேவைகள் அதிகாலை 3 மணி முதல் இயக்கப்படும்
சென்னை மாரத்தான் ஓட்டம் வருகின்ற 06.01.2024 (சனிக்கிழமை) அன்று அதிகாலை 4 மணி முதல் நடைபெறுகிறது. இதனையொட்டி மாரத்தான் பங்கேற்பாளர்கள் பயன்பெறும் வகையில் மற்றும்…
மேலும் அன்று ஒரு நாள் மட்டும் செல்லுபடியாகும் இலவச ரயில் பயணங்களை போல (மாரத்தான் போட்டியில் பங்கேற்பவர்களுக்கு மட்டும்) மெட்ரோ ரயில் நிலையங்களில் மாரத்தானில் பங்கேற்பவர்கள் இலவசமாக தங்கள் வாகனங்களை நிறுத்திக்கொள்ளவும் அனுமதி அளிக்கப்படுகிறது என்று அறிவித்துள்ளது மெட்ரோ நிர்வாகம்.
அண்ணன் ராகுல், அன்னை சோனியாவைச் சந்தித்தேன்: உதயநிதி ஸ்டாலின் உற்சாகம்