இனி ஓட்டுநர் இல்லாமல் இயக்கும் சென்னை மெட்ரோ ரயில்.! எப்போது.? எங்கிருந்து எங்கே தெரியுமா.? வெளியான அறிவிப்பு

By Ajmal Khan  |  First Published Nov 28, 2023, 2:40 PM IST

மெட்ரோ ரயிலில் ஓட்டுநர் இல்லாமல் இயக்க சென்னை மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக புதிய மெட்ரோ ரயிலை உருவாக்க ஒப்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலானது பூந்தமல்லி வழித்தடத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 


ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. ஆரம்பகட்டத்தில் கட்டணம் அதிகமாக இருந்த காரணத்தால் பயணிகள் அதிகளவு மெட்ரோ ரயிலில் பயணிக்கவில்லை. தற்போது பயண கட்டணம் குறைக்கப்பட்டதையடுத்து கூட்டமானது நிரம்பி வழிகிறது. மேலும் பணி நிமித்தமாக வெளியே செல்பவர்களுக்கு முக்கிய உதவியாக உள்ளது. இந்தநிலையில் மெட்ரோ ரயிலின் அடுத்த கட்டமாக ஓட்டுநர் இல்லாமல் மெட்ரோ ரயில் இயக்க சென்னை மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான தனியார் நிர்வாகத்தினம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில்,  

Tap to resize

Latest Videos

தனியார் நிறுவனத்தோடு ஒப்பந்தம்

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், ஒட்டுனர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 10 மெட்ரோ இரயில்களை (மொத்தம் 30 பெட்டிகள்) வழங்குவதற்கான துணை ஒப்பந்தத்தை அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.269 கோடி மதிப்பில் வழங்கியுள்ளது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குனர் திரு. ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்) மற்றும் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்தின் வர்த்தக இயக்குனர் திரு. ராஜீவ் ஜோய்சர் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் ஏ.ஆர்.ராஜேந்திரன் (தொடர்வண்டி மற்றும் இயக்கம்), உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

புதிய மெட்ரோ ரயில்

சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-II இன் கீழ், ஒட்டுனர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 26 மெட்ரோ இரயில்களை (மொத்தம் 78 பெட்டிகள்) உருவாக்கும் ஒப்பந்தம் (ARE-03A) அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்திற்கு ரூபாய் 946 கோடியே 92 லட்சம் மதிப்பில் (வரிகள் உட்பட), கடந்த ஆண்டு 2022 நவம்பர் 17-ஆம் தேதி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 27.11.2023 துணை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனம் கூடுதலாக 3 பெட்டிகளை கொண்ட 10 மெட்ரோ இரயில்கள் (மொத்தம் 30 பெட்டிகள்) என மொத்தம் 36 மெட்ரோ இரயில்களை மொத்தம் 108 பெட்டிகள்) வழங்கும்.

பூந்தமல்லி வழித்தடத்தில் இயக்க திட்டம்

இந்த ஒப்பந்தத்தில், வடிவமைப்பு உற்பத்தி, சோதனை, தரமான மெட்ரோ இரயில் இயக்குதலுக்கான தகுதி, பணியாளர்களுக்கு பயிற்சி, உதிரி பாகங்கள் வழங்கல் மற்றும் குறைபாடு பொறுப்பு உள்ளிட்ட ஒட்டுனர் இல்லாத மெட்ரோ இரயில்களை வழங்குதல் போன்றவை உள்ளடங்கும். இந்த ஒப்பந்ததின் கீழ், மெட்ரோ இரயில்கள் 28 மாதங்களில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். வழித்தடம்-4-ல் பூந்தமல்லியில் கட்டப்பட்டு வரும் பணிமனையில் மெட்ரோ இரயில்கள் பராமரிக்கப்பட்டு இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இதையும் படியுங்கள்

சென்னையில் அதிர்ச்சி சம்பவம்.. இன்ஸ்டா விளம்பரத்தை நம்பி அழகு நிலையம் சென்ற பெண்ணின் காது அழுகியது.!

click me!