சென்னையில் அதிர்ச்சி சம்பவம்.. இன்ஸ்டா விளம்பரத்தை நம்பி அழகு நிலையம் சென்ற பெண்ணின் காது அழுகியது.!

By vinoth kumarFirst Published Nov 28, 2023, 2:17 PM IST
Highlights

சென்னை சூளை பகுதியை சேர்ந்த சுஷ்மிதா என்பவர் பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள அழகு பயிற்சி அகடாமியில் 2500 ரூபாய் செலுத்தி கடந்த பயிற்சி வகுப்பு சென்றுள்ளார். 

சென்னையில் காதில் இருந்த ஓட்டையை அடைப்பதாக கூறி காதை அழுக வைத்துவிட்டதாக அழகு நிலையம் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் இளம்பெண் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். 

இன்ஸ்டாகிராமில் அழகு குறித்த விளம்பரத்தை பார்த்து சென்னையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது காதில் உள்ள ஓட்டையை அடைக்க அழகு பயிற்சி அகடாமிக்கு சென்றிருக்கிறார். ஆனால் அவர்கள் கொடுத்த மருந்தை எடுத்துக்கொண்டதால் இளம்பெண்ணின் காது அழுகிபோயுள்ளது.

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

சென்னை சூளை பகுதியை சேர்ந்த சுஷ்மிதா என்பவர் பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள அழகு பயிற்சி அகடாமியில் 2500 ரூபாய் செலுத்தி கடந்த பயிற்சி வகுப்பு சென்றுள்ளார். அங்கு அவருடைய காதில் இருந்த ஓட்டை சரிசெய்வதாக கூறி கிரீம் போல மருந்தை தடவி ஓட்டையை அடைத்தனர். மறுநாளில் காதில் அவர்கள் தடவிய கிரீம் மிகுந்த அரிப்பையும், வலியையும் ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அவர்களை தொடர்பு கொண்ட கேட்ட போது சரியான பதில் அளிக்கவில்லை. 

இதையும் படிங்க;- Jos Alukkas Robbery: ஷாக்கிங் நியூஸ்.. கோவையில் ஜோஸ் ஆலுக்காஸில் 25 கிலோ தங்க நகைகள் கொள்ளை.!

இதனையடுத்து ஒரு வாரம் கழித்து அழகு பயிற்சி அகடாமிக்கு நேரில் சென்ற போது காது அழுகி விட்டதாக கூறி அகற்றியுள்ளனர். பின்னர் மருத்துவரிடம் சென்று காண்பித்த போது தவறான மருந்தை காதில் போட்டிருப்பதாக மருத்துவர் கூறியுள்ளார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட அந்தத பெண் சம்மந்தப்பட்ட அழகு பயிற்சி அகடாமி மீது காவல் ஆணையர் அலுவலகதத்தில் புகார் அளித்துள்ளார். 

click me!