
3 வயது சிறுவன் கால்வாயில் விழுந்து இறந்தது தொடர்பாக முறையாக விசாரணை நடத்தாத போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வேதனை தெரிவித்த தலைமை நீதிபதி மூன்றாண்டுகளாக மெத்தனம் காட்டிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
தரமணி சீனியம்மன் கோயில் தெருவை சேர்ந்த வர் குமார்-கீர்த்திகா தம்பதியினர். இவர்களது மகன் தினேஷ் (3), மகள் குமாரி (2). அந்த பகுதியில் உள்ள சிஎஸ்ஐஆர் சாலையில் குமாரின் தந்தை கணபதி பெட்டிக் கடை வைத்துள் ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூன் 15 அன்று பெட்டிக்கடை அருகே கணபதியுடன் விளையாடிக் கொண்டிருந்த தினேஷ் திடீரென்று காணாமல் போனான். இதுகுறித்து தரமணி போலீசில் புகார் அளித்தார்.இந்நிலையில் ஜூன் 16 அன்ற போலீசார் அந்த பெட்டிக்கடையை ஒட்டி செல்லும் கால்வாயில் சோதனை செய்தனர். அதில் தினேஷ் உடல் மிதந்து கொண்டிருந்தது.
இதனை யடுத்து உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத் துவமனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக வழக்கும் பதிவு செய்துள்ளனர்.இப்பகுதிக்கு அருகே சிஎஸ்ஐஆர் சாலையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்படடுள்ளது. அந்தக்கால்வாயில் கழிவு நீரும் விடப்படுகிறது.
கால் வாயின் மீது உள்ள சிலாப்புகள் சரியாக மூடப்படா மல் உள்ளது. தரமணி பகுதி முழுவதும் பல்வேறு இடங்களில் பாதாள சாக் கடை மூடிகள் திறந்தே கிடக்கின்றன.இதனால், சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்க ளும் தடுமாறி விழும் நிலை உள்ளது.
இது தொடர்பாக டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு தொடர்பாக மாநகராட்சி கமிசனர் கார்த்திகேயன், அடையாறு துணை கமிசனர் சுந்தரவடிவேல் ஆகியோர் நேரில் ஆஜாரானார்
அப்போது சம்பவம் நடந்து 3 ஆண்டுகள் கடந்த பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு வந்த பின்னர் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளானர். மேலும் புலன் விசாரணை கூட முறையாக நடத்தப்படவில்லை என்று கண்டனம் தெரிவித்தார்.
தற்போது இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பின்னர் தான் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பது வேதனை அளிக்கிறது. இதற்கு காரணமான போலீசார் மீது துறை ரீதியாக குறைந்தப்பட்ட தண்டனையாவது காவல் ஆணையர் எடுக்க வேண்டும். மேலும் இந்த வழக்கு தொடர்பான முறையாந விசாரணை அறிக்கையை ஜனவரி 30க்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு ஒத்தி வைத்தனர்