கடவுள் இருக்கான் குமாரு படத்திற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை

 
Published : Nov 09, 2016, 05:29 AM ISTUpdated : Sep 19, 2018, 01:19 AM IST
கடவுள் இருக்கான் குமாரு படத்திற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை

சுருக்கம்

லிங்கா படத்தை திருச்சி - தஞ்சை பகுதிக்கு வெளியிட்டவர் சிங்காரவேலன். இவர் திருச்சி - தஞ்சை பகுதிக்கு வெளியிட்டு இருந்தாலும், திரையரங்குகளை ஒப்பந்தம் செய்யும்போது  திரையரங்குகளும் சேலத்தை சேர்ந்த 7G பிலிம்ஸ் சிவா மட்டுமே ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று வேந்தர் மூவிஸ் சார்பில் கண்டிஷன் போடப்பட்டது.

6.5 கோடி ரூபாய் திரையரங்குகள் மூலம் வசூலித்து தருவதாக ஒப்பந்தம் போட்ட சேலம் 7G சிவா திரையரங்குகளில் இருந்து 6.5 கோடி வசூலித்து விட்டு 5 கோடி 88 லட்சம் மட்டுமே செலுத்தினர். மீதி 62 லட்சத்தை செலுத்தவில்லை. சேலம் 7G சிவா தான் கடவுள் இருக்கான் குமாரு படத்தை வெளியிட இருக்கிறார். சேலம் 7G சிவாவிடமிருந்து தனக்கு பணம் வர வேண்டும் என்றும் இந்த படம் வெளியானால் தனக்கு பணம் கிடைக்காமல் போய்விடும் என்று சிங்காரவேலன் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஆதாரங்களை பார்த்த நீதிபதி படத்திற்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டார்.

PREV
click me!

Recommended Stories

சுழன்று அடிக்கப்போகும் சூறாவளிக்காற்று.! மீனவர்களுக்கு எச்சரிக்கை.! மழை எப்போது? வானிலை மையம் முக்கிய அப்டேட்
விஜய் கண் எதிரே திமுக அரசை பாராட்டிய ஆற்காடு நவாப்! அப்படியே ஷாக்கான தளபதி! என்ன நடந்தது?