
காஞ்சிபுரம்
கணவன் மனைவி இடையே அடிக்கடி ஏற்பட்ட பிரச்சனையால் மனமுடைந்த பெண் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்து தற்கொலைச் செய்துக் கொண்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சூனாம்பேடு அருகே நல்லூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் நளினி (32). இவருக்குத் திருமணம் ஆகி மூன்று வருடங்கள் ஆகின்றன.
இவரது கணவருக்கும், இவருக்கும் இடையே அடிக்கடி குடும்பப் பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.
ஒவ்வொரு முறையும் பிரச்சனை அதிகரித்துக் கொண்டே இருந்ததால் வேதனை அடைந்துள்ளார் நளினி.
சம்பவத்தன்று, இருவருக்கும் இடையே வலுவான வாக்குவதம் ஏற்பட்டுள்ளது. இதனால், மனமுடைந்த நளினி மண்ணெண்ணெய் உடம்பின் மீது ஊற்றித் தீ வைத்துக் கொண்டார்.
இதில், நளினி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த சூனாம்பேடு காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.