
தருமபுரியில் அதிகாலையில் காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டை நோக்கி கருணாநிதி மற்றும் பூபாலன் ஆகிய இருவரும் காரில் வந்துக் கொண்டிருந்தனர்.
மறுபுறம், பாலக்கோட்டில் இருந்து தருமபுரியை நோக்கி லாரி ஒன்று வந்துக் கொண்டடிருந்தது.
புலிகரை அருகே இருக்கும் ஏரிகரை என்ற இடத்தை நெருங்கும்போது எதிர்பாராத விதமாக இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.
இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொருங்கியது.
இதில் காரில் பயணம் செய்த கருணாநிதி மற்றும் பூபாலன் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து மதிக்கோன்பாளையம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.