
இடைத்தேர்தல் அமைதியாக நடைபெறும் வகையில் பாதுகாப்பு அளிக்க தமிழகம் வந்த துணை ராணுவப் படையினர் தஞ்சாவூர் வந்து சேர்ந்தனர்.
தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த பாதுகாப்பு படையின் துணை ராணுவப் படையை அழைத்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி விஜயவாடாவில் இருந்து துணை ராணுவப் படையினர் 82 பேர் தஞ்சாவூர் தொகுதிக்கு வந்துள்ளனர்.
32வது பட்டாலியனை சேர்ந்தவர்கள் ரயில் மூலம் கூடுதல் கமாண்டோ சைதன்யா தலைமையில் இன்று தஞ்சாவூர் வந்தனர். இவர்கள் திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நாளை மறுநாள் முதல் துணை ராணுவப்படையினர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிகிறது.
தஞ்சாவூர் தொகுதியில் 88 இடங்களில் 276 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இவற்றில் 256 மையங்கள் நகர் புறங்களிலும், 20 மையங்கள் கிராமப்புறங்களிலும் அமைக்கப்பட உள்ளன. இதில் 17 மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.
இவை 22 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. மேலும் துணை ராணுவப்படையினர் தஞ்சைக்கு வர உள்ளதாகவும் கூறப்படுகிறது.