ஸ்ரீரங்கம் கோயில் கணக்குகளை சிஏஜி தணிக்கை செய்ய முடியாது... வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!!

By Narendran SFirst Published Dec 20, 2022, 7:42 PM IST
Highlights

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் கணக்கு வழக்குகளை மத்திய கணக்கு தணிக்கைத் துறை மூலம் தணிக்கை செய்ய கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் கணக்கு வழக்குகளை மத்திய கணக்கு தணிக்கைத் துறை மூலம் தணிக்கை செய்ய கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் கடந்த 2018 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் கணக்கு வழக்குகளை மத்திய கணக்கு தணிக்கைக் குழு மூலம் தணிக்கை செய்ய உத்தரவிட வேண்டும்.

இதையும் படிங்க: கந்தசஷ்டி கவசம் பாடி பக்தர்களை பரவசப்படுத்திய இஸ்லாமிய மாணவி

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலை நிர்வகிக்கும் நிர்வாகிகள் முறையாக நிர்வகிக்கவில்லை. எனவே கோயில் நிர்வாகத்தை முழுமையாக மாற்றியமைக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனு மீதான வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

இதையும் படிங்க: ஜன.4 கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்... பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல்!!

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் கணக்கு வழக்குகளை ஐஏஎஸ் அதிகாரிகள் தணிக்கை செய்து வருவதால், மத்திய கணக்கு தணிக்கைத் துறையினரைக் கொண்டு தணிக்கை செய்ய உத்தரவிட முடியாது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் நிர்வாகம் முழுமையாக மாற்றப்பட்டு விட்டதால் இந்த வழக்கு செல்லாததாகிவிட்டது, கோயில் நிர்வாகம் முழுவதையும் மாற்றியமைக்க உத்தரவிட முடியாது என்றும் நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர். 

click me!