Rafael Watch Annamalai:அண்ணாமலை கட்டிய ரபேல் வாட்ச்; ரபேல் விமான பாகத்தில் செய்யலையா? உண்மை இதுதான் மக்களே !

By Raghupati R  |  First Published Dec 20, 2022, 5:19 PM IST

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கட்டிய ரபேல் வாட்ச் கடந்த சில நாட்களாக ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.


கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், சமீபகாலமாக அரசியலில்வாதிகளின் உடை, பயன்படுத்தும் பொருட்கள் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது. கையில் கட்டி இருக்கும் வாட்ச் 3.5 லட்ச ரூபாய். ரபேல் விமானத்தின் மூலப் பொருட்களைக் கொண்டு இந்த வாட்ச் தயாரித்தார்கள். மொத்தம் 500 வாட்சுகள் நாட்டில் இருக்கின்றன. ரபேல் விமானம்  ஓட்டக் கூடிய பாக்கியம் கிடைக்கவில்லை. அதன் பாகத்தில் இருக்கும் இந்த வாட்சை கட்டி இருக்கிறேன்.

ஒவ்வொரு வாட்ச்சிற்கும் எண் இருக்கும், இது 149வது வாட்ச். என் உயிர் இருக்கும் வரை இந்த வாட்ச் இருக்கும். நான் தேசியவாதி. அதனால் ரபேல் வாட்ச்சை கட்டி இருக்கிறேன்,  இது என் தனிபட்ட விஷயம் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது மீதான விமர்சனத்திற்கு பதில் அளித்து இருந்தார்.

Tap to resize

Latest Videos

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, பிரான்ஸ் நிறுவத்திற்காக, உலகில் வெறும் 500 கை கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட, 5 லட்சத்துக்கும் மேல் விலையுள்ள Rafale watchஐ, வெறும் 4 ஆட்டுக்குட்டி மட்டுமே சொத்தென சொல்லும் ஆட்டுப்புளுகர் கட்டியிருக்கிறார். அவர் வாங்கின ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட்டால் எளியவர்களும் வாங்கி மகிழலாம்.

வெளிநாட்டு வாட்சை கட்டியிருக்கும் தேசியவியாதி, மன்னிக்க தேசியவாதி, ஆடு வளர்த்து சேர்த்து 5 லட்ச ரூபாய் வாட்ச் கட்டும் அளவுக்கு உயர்ந்தது எப்படி? வார்ரூம் வழியாக தொழிலதிபர்களை மிரட்டினால் இப்படியெல்லாம் பணம் கிடைக்குமா ? கடிகாரம் வாங்கிய ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட முடியுமா ? இல்லை வழக்கம்போல excel sheet ஏமாத்து வேலை தான் வருமா ? என்று பதிலடி கொடுத்தார்.

இதையும் படிங்க..அப்போ இருந்த இலங்கை போராட்ட களமா இது.? அனைவரையும் ஆச்சரியப்படுத்திய வைரல் புகைப்படம் !!

அப்படியென்ன இந்த ரபேல் வாட்ச்சில் இருக்கிறது என்பதை பார்க்கலாம்.ரபேல் என்பது பிரான்ஸ் நாட்டின் போர் விமானம் ஆகும். டஸால்ட் நிறுவனத்தின் இந்த போர் விமானத்தைதான் இந்தியாவும் பயன்படுத்தி வருகிறது. போர் விமானங்களை தயாரிக்க ஆரம்பித்து 50 ஆண்டுகள் ஆனதை பொன் விழாவாக 2013 ஆம் ஆண்டு டஸ்ஸால்ட் நிறுவனம் கொண்டாடியது.

அதன்  நினைவாக பெல் அண்டு ராஸ் என்ற பிரான்ஸ் கடிகார நிறுவனத்துடன் இணைந்து 500  கடிகாரங்களை தயாரிக்க  டஸ்ஸால்ட் நிறுவனம் முடிவு செய்தது. அதற்காக ரபேல் விமானம் செய்வதற்கான மூலப் பொருட்களை மட்டும் பயன்படுத்தவும் தீர்மானித்தது. 2015 ஆம் ஆண்டு ரபேல் மாடல் வாட்சுகளை வெளியிட்டது. இந்த மாடல் வாட்சுகள் இந்திய ரூபாயில் அப்போது 4.40 லட்சத்திற்கு விற்பனை ஆனது.

இதில் மொத்தம் 500 மாடல்கள் மட்டுமே உலகம் முழுக்க தயாரிக்கப்பட்டது. அப்போதே புக் செய்த 500 பேருக்கு மட்டுமே உலகில் இந்த வாட்ச் கிடைத்தது. அதே நேரம் விற்பனைக்கு வந்த 2013-2015 ஆண்டுகளில் 6,200 அமெரிக்க டாலர் என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டதாம். 2015ல் ஒரு டாலரின் இந்திய மதிப்பு 62.97 ரூபாயாகும்.  அதனால் அப்போதைய இந்திய மதிப்பு 3 லட்சத்து 90 ஆயிரம். மணி, நிமிடம், விநாடிகளை  காட்ட தனித்தனி முட்கள் இருக்கின்றன. தேதியும் காட்டும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

ரபேல் விமானத்தில் பயன்படுத்தப்படும் செராமிக் அதாவது பீங்கான் போன்ற  எஃகு பொருட்களை கொண்டு கடிகாரத்தின் கேஸ் அமைக்கப்பட்டுள்ளது. இந்த செராமிக் எஃகு பொருட்கள்தான் ஜெட் விமானங்களில், ராக்கெட்களில்  வெப்பம்  தாக்குப்பிடிக்கும் இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. செராமிக் எஃகு போன்ற உறுதியான கடினத்தன்மையுள்ள  பொருட்களை பயன்படுத்தினாலும் இது வழக்கமான கடிகாரங்களை விட பல மடங்கு எடை குறைவானதாகும்.

இதன் பேண்ட் மட்டும் ரப்பரில் உருவாக்கப்பட்டது. ஆனால் இதை ரபேல் விமான பாகத்தில் எல்லாம் செய்யவில்லை என்பதும் நிரூபணம் ஆகியுள்ளது. ரபேல் கடிகாரத்தின் அப்போதைய இந்திய மதிப்பு குறைந்தது 5 லட்சமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. தற்போதைய மதிப்பில் வரிகள் உட்பட சேர்த்தால் அது 6 லட்சத்திற்கும் மேல் வரும் என்று தெரிகிறது. 

இதையும் படிங்க..செலவே இல்லாமல் சுற்றுலா செல்ல வேண்டுமா.? நீங்க வந்தா மட்டும் போதும்! - இந்த நாடு பற்றி தெரியுமா உங்களுக்கு?

click me!