சென்னையில் மீண்டும் ஒரு சுவாதி பிரச்சனை - காதலிக்க மறுத்த இளம்பெண்ணுக்கு கத்திகுத்து

Asianet News Tamil  
Published : Oct 29, 2016, 12:49 AM ISTUpdated : Sep 19, 2018, 12:50 AM IST
சென்னையில் மீண்டும் ஒரு சுவாதி பிரச்சனை - காதலிக்க மறுத்த இளம்பெண்ணுக்கு கத்திகுத்து

சுருக்கம்

சென்னை கோயம்பேட்டில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணை கத்தியால் முகத்தில் குத்தி கொலை செய்ய முயன்றுள்ளான் வாலிபன் ஒருவன் , பலத்த காயாத்துடன் இளம்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தப்பி ஓடிய வாலிபரை போலீசார் போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

என்ன நடவடிக்கை எடுத்தாலும் , என்ன தான் சமுதாயம் தூற்றினாலும் ஒரு தலை காதல் கிறுக்கன்களுக்கு தங்கள் செய்வது தான் நியாயம் என செய்வதால் பாதிக்கப்படுவது அப்பாவி பெண்களும் அவர்களது குடும்பத்தாரும் தான்.

சென்னையில் ராம்குமார் சுவாதி விவகாரம் தொடர்ந்து கரூரில் கல்லூரிக்குள் மாணவி கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டது வரை இது தொடரத்தான் செய்கிறது.சென்னையில் நேற்று மீண்டும் இதே போன்றதொரு சம்பபவம் நடந்துள்ளது.

இதில் கத்தியால் குத்தப்பட்ட பெண் அதிர்ஸ்டவசமாக உயிர் தப்பி விட்டார். சென்னை கோயம்பேடு நேற்று பரபரப்பாக காணப்பட்டது. வெளியூர் செல்பவர்கள் பஸ்சை பிடிக்கும் ஆர்வத்தில் சென்று கொண்டிருந்தனர்.

இந்நிலையில் அண்ணா நகரில் வசிக்கும் , ஆச்சி மசாலா தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இளம்பெண்  சிவரஞ்சனி(25) நேற்றிரவு சொந்த ஊ‌ரான திருவாரூக்கு செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். 

அப்போது தமிழக தேர்தல் ஆணையம் அருகே அவரை வழி மறித்த வாலிபர் ஒருவர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் இளம்பெண்ணை கொல்ல குத்தியுள்ளார்.

இதில் முகத்தில் குத்துபட்டு உதடு பகுதி கிழிந்துள்ளது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் சத்தம் போடவே அந்த வாலிபர் தப்பி ஓட முயன்றுள்ளார். இதைபார்த்த பொதுமக்கள் வாலிபரை மடக்கி பிடித்து கோயம்பேடு போலீசில் ஒப்படைத்தனர்.

கத்தி குத்தால் காயம் அடைந்த இளம் பெண் சிவரஞ்சனி சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவன் பெயர் அரவிந்த் (32) என்பதும் கிண்டியில் வசித்து வருவதாகாவும் தெரிவித்துள்ளான்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் அரவிந்தும் ,சிவரஞ்சனியும் ஒரு பிபிஓ கம்பெனியில் ஒன்றாக பணியாற்றி உள்ளனர். அப்போது அரவிந்துக்கு சிவரஞ்சனி மீது ஒருதலை காதல் உருவாகி உள்ளது. ஆனால் சிவரஞ்சனி அரவிந்தை காதலிக்கவில்லை. அவனது காதலை ஏற்க மறுத்துவிட்டார். மேலும் மேலும் அரவிந்த் தொல்லை கொடுக்கவே தான் வேலை பார்த்த இடத்திலிருந்து ராஜினாமா செய்துவிட்டு ஆச்சி மசாலா கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துள்ளார். 

ஆனாலும் அரவிந்த் தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார். தொடர்ந்து சிவரஞ்சனி மறுத்துவந்துள்ளார். இந்நிலையில் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற அரவிந்த் நேற்று சிவரஞ்சனியை கத்தியால் குத்தியுள்ளார்.தற்போது போலீசார் அரவிந்தை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

ஜோதிமணி மீது நடவடிக்கை பாயுமா? செல்வபெருந்தகையின் 'அடடே' விளக்கம்!
2026ஆம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் பெரும் மாற்றம் இருக்கும் - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி